முகத்தை கூட காட்ட மாட்டீங்களா.. இப்போ பாருங்க.. எடப்பாடியை பழிவாங்கிய செங்கோட்டையன்.. என்ன நடந்தது?
சென்னை: எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமணத்தின் வரவேற்பில் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பு, மணமக்களை வாழ்த்திவிட்டு, எடப்பாடிக்காக காத்திருக்காமல் கிளம்பிச்சென்றுவிட்டார் செங்கோட்டையன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.
அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சமீபகாலமாக உரசல் அதிகரித்திருந்தது. இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையும் நின்று போனது. ஆனால், இந்த முறுகல் நிலை தேவையற்றது. தலைவர்களே இப்படி உள்கட்சி பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று எடப்பாடி மற்றும் செங்கோட்டையனிடம் சீனியர்கள் பேசியிருக்கிறார்கள்.

செங்கோட்டையன் எடப்பாடி மோதல்
இதனை செங்கோட்டையன் உணர்ந்தாலும், எடப்பாடி உணர்ந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் 82 பேருடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பலரிடமும் பேசினார் எடப்பாடி. ஆனால், செங்கோட்டையனிடம் எதுவும் பேசவில்லை.
ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களிடமும் எடப்பாடி பேசியது போல செங்கோட்டையனிடமும் எடப்பாடி விவாதித்திருந்தால் செங்கோட்டையன் கூலாகியிருப்பார். எடப்பாடி தன்னிடம் பேசுவார் என்றும், பேசினால் சகஜமாக பேச வேண்டும் என்றும், கொங்கு மண்டல குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியல் பற்றி நிறைய விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்திருந்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் அப்செட்
ஆனால், செங்கோட்டையனிடம் எடப்பாடி முகம் காட்டவில்லை. கூட்டம் முடியும் தருவாயில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றி சொல்லும் போது செங்கோட்டையனின் பெயரையும் சொன்னார். இதைத்தவிர, செங்கோட்டையன் எதிர்பார்த்தது எதுவும் காணொலி காட்சி கூட்டத்தில் நடக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் அப்-செட்டானார்.
கோபத்தின் உச்சிக்கே போனார்
இது குறித்து வேலுமணியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அப்போது, ரிசப்ஷனுக்கு வாருங்கள் ; எல்லாம் நல்லதாக நடக்கும் என்றிருக்கிறார். இது, செங்கோட்டையனுக்கு நெருடலாக இருந்தது. இந்த நிலையில், காணொலி காட்சியில் தம்மிடம் முகம் காட்ட எடப்பாடி மறுத்த கோபம் செங்கோட்டையனிடம் இருந்தது. அதனால், ரிசப்ஷனில் எடப்பாடியின் முகத்தைக்கூட பார்க்கக்கூடாது என நினைத்துதான், எடப்பாடி வருவதற்கு முன்பு ரிசப்ஷனுக்கு வந்துவிட்டு உடனே கிளம்பிச் சென்று விட்டார் செங்கோட்டையன். இவர்களுக்கிடையே இருக்கும் அரசியல் எப்போது தீருமோ? என்கிறார்கள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.
அதிகரிக்கும் மோதல்
முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த வாரம் சந்தித்தார் அதிமுக சீனியர் செங்கோட்டையன். அந்த சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் என்ன விவாதித்துக் கொண்டனர்? எதற்காக சந்தித்தார்? என்பது பற்றி அறிந்து கொள்ள ஏகத்துக்கும் மெனக்கெட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓய்வுப்பெற்ற முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியின் உதவியையும் கேட்டுள்ளார் எடப்பாடி. இதற்கிடையே, தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.
ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதின்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனா, சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications