"உன்னை பற்றி சொல்கிறேன்".. பயில்வான் மீது ரேகா நாயர் கோபப்பட்டது ஏன்? பழைய வீடியோவில் சொன்னது என்ன?
சென்னை: பயில்வான் ரங்கநாதன் மீது நடிகை ரேகா நாயர் கோபம் அடைந்தது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
நேற்று முதல்நாள் திருவான்மியூர் பீச்சில் நடைப்பயிற்சிக்கு சென்ற பயில்வான் ரங்கநாதனை நடிகை ரேகா நாயர் மறித்து சண்டை போட்டார். தன்னை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனை கடுமையான விமர்சனம் செய்து, ரேகா நாயர் திட்டினார்.
பயில்வான் ரங்கநாதனை ரேகா நாயர் திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

என்ன சொன்னார்?
நான் ஆடையில்லாமல் நடித்தால் உனக்கு என்ன? நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன். உனக்கென்ன.. நான் என்ன உன் பொண்டாட்டியா? நீ யார் என்ன கேட்க? என்று ரேகா நாயர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பயில்வானை விளாசி தள்ளினார். இதை கேட்க முடியாமல் அங்கிருந்து எப்படியாவது நகர்ந்து சென்றுவிட பயில்வான் முயன்றார். ஆனால் ரேகா விடாமல் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே வந்தார்.

பயில்வான் ரங்கநாதன்
ரேகா பயில்வான் மீது கோபம் அடைய காரணம், பயில்வான் நான்கு நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த வீடியோவில் ரேகா மீது கடுமையான விமர்சனங்களை, அவதூறுகளை பயில்வான் தொடுத்து உள்ளார். திரை கூத்து என்று சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்த பயில்வான் ரங்கநாதன் சில கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். அவர் தனது வீடியோவில் பேசியதாவது, இரவின் நிழல்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளன. சாமியார் ஒருவரை பற்றி சில காட்சிகள் வருகின்றன.

ரேகா
இந்த படத்தில் பிரிகிடா என்பவர் டீச்சராக வருகிறார். அவர் நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். அதேபோல் ரேகா நாயரிடம் குழந்தை பால் குடிப்பது போன்ற காட்சிகளில், ரேகா நாயர் அரைநிர்வாணமாக நடித்துள்ளார். டேக்கின் போது ஒரு மார்பை காட்ட சொன்னதற்கு, இரண்டு மார்பு பகுதிகளையும் காட்டி நடிக்க ரேகா நாயர் தயாராக இருந்தார். 23 டேக்குகள் இந்த ஷாட்டில் எடுத்துள்ளனர். 24வது டேக் முடிந்ததும் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக ரேகா கூறியுள்ளார்.

சித்ரா
இந்த ரேகா நாயர் மறைந்த சித்ராவின் நண்பர். இருவரும் நெருங்கிய தோழிகள். இந்த மரணத்தில் பரபரப்பை கிளப்பியதே ரேகா நாயர்தான். இவர் டிவி நடிகை. சித்ராவுடன் எம்எல்ஏ தொடர்பில் இருந்ததாக ரேகாதான் பரபரப்பை கிளப்பினார். பல பரபரப்பிற்கு காரணமாக இருந்தவர் ரேகா நாயர். ரேகா நாயர் இரவின் நிழல் படத்திற்காக கொடுத்த விளம்பரம், அந்த படத்தில் மற்ற இருக்கும் சிறப்புகளை மறைத்துவிட்டது, என்று பயில்வான் ரேகா பற்றி விமர்சனம் செய்தார்.

விளம்பரம்
மேலும், இனி ரேகாவிடம் சித்ரா மர்ம மரணம் பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். சித்ரா வீட்டிற்கு தான் சென்றதாக ரேகா திடுக்கிடும் தகவல்களை சொல்லி இருந்தார். அதோடு சித்ரா போதை பொருள் பயன்படுத்தியதாக ரேகா கூறி இருந்தார். நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். சித்ரா போதை பொருள் பயன்படுத்துகிறார் என்றால்.. அவரின் தோழி ரேகாவின் நடத்தை, இமேஜ் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள், என்று ரேகாவை கடுமையாக, ஆதாரம் இன்றி பயில்வான் ரங்கநாதான் விமர்சனம் செய்து இருந்தார். இந்த வீடியோதான் ரேகாவை காயப்படுத்தி உள்ளது.

கோபம்
4 நாட்களுக்கு முன் வெளியான இந்த வீடியோதான் ரேகா நாயரை கோபப்படுத்தி உள்ளது. இதற்குத்தான் பதிலடி கொடுக்கும் வகையில் ரேகா நாயர் பயில்வானை கடுமையாக விமர்சனம் செய்து, நடுரோட்டில் வைத்து திட்டி இருக்கிறார். வீடியோக்களில் கடுமையாக பேசும் பயில்வான் கடைசியில் ரேகாவின் விமர்சனங்களை கேட்க முடியாமல் அங்கிருந்து பதறி ஓடிய வீடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. பெண்கள் மீது அவதூறு பரப்பும் பயில்வான் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications