செந்தில் பாலாஜி கைது.. நேரடியாக களமிறங்கிய சபரீசன்.. மருத்துவமனைக்கே வந்துட்டாரே.. நடந்தது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரடியாக மருத்துவமனைக்கே வந்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் கைதுக்கு இடையில் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அவருக்கு சில நிமிடங்களுக்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ என்பது தமனி சார்ந்த பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். ஆஞ்சியோ முடித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்கள் உதயநிதி , சுப்ரமணியன் ,வேலு , ரகுபதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வருகை புரிந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துப்புறுத்தப்பட்டதாக திமுகவின் டாப் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அவர் துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் உறுதியாக செய்தி வெளியிட்டு உள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
சபரீசன்: இந்த நிலையில் ஸ்டாலின் வந்துவிட்டு சென்ற சில மணி நேரங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரடியாக மருத்துவமனைக்கே வந்துள்ளார். ஆனால் செந்தில் பாலாஜி அப்போதுதான் ஆஞ்சியோ முடித்ததால் அவரை சபரீசன் சந்தித்தாரா என்று தகவல் வெளியாகவில்லை.
பொதுவாக சபரீசன் இது போல பொதுவில் அடிக்கடி தோன்ற மாட்டார். ஆனால் இந்த முறை நேரடியாக அவர் செந்தில் பாலாஜியை சந்திக்க வந்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து சேகர் பாபுதன சபரீசனுக்கு விளக்கினார். இதையடுத்து தற்போது காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார் செந்தில் பாலாஜி;
இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?: செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.
அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காகவும், முறையாக கைது செய்யவும் அவரை அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications