சத்யபாமா அழற அளவுக்கு என்ன நடந்தது? உருவப்பட்ட 19 எம்எல்ஏக்கள்.. தாராபுரத்தில் குண்டூசி கூட நகர்த்தல
சென்னை: சத்யபாமா அழும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? எப்ப பார்த்தாலும், புலம்பி, அழுது, சிம்பத்தியாக பேசி, குதிரை பேரம் நடத்தி, சோபா அரசியல் செய்து, இப்படித்தான் தவெக பெயர் வாங்கியிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி எப்படியும் 14 முறை தோற்றிருப்பார். ஒரு இடத்திலும் கண்கலங்கி அழுததில்லை.. ஸ்டாலினும்தான் கொளத்தூரில் தோற்றார்.. இப்படியா நாடகம் நடத்திட்டு இருக்கார்? கண்கலங்குவதிலேயே தவெகவின் தோல்வி பயம் தெரிகிறது.. இதுவே அதிமுகவுக்கு வெற்றிதான்" என்று வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கட்சிக்கு சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தாராபுரம் தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தார்கள்.. 30 ஆயிரம் ஓட்டுகள் மைனஸில் இருந்தார்கள்..

ஆனால் தாராபுரம் தொகுதியில் ஒரு குண்டூசியை கூட நகர்த்தவில்லை.. கடந்த சில மாதங்களாக மக்கள் நலனுக்காக எந்தவொரு அடிப்படை மாற்றமும் செய்யப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்தடை போன்ற பிரச்சனைகள் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், வேட்பாளர் பிரச்சாரத்தின் போது தடுமாறுகிறார்..
சத்யபாமா கண்ணீர்
சத்யபாமா கண்கலங்கி சொல்கிறார், "எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் சேர்ந்து துரோகம் செய்து பார்த்தார்.. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தது தவறா?" என்கிறார்.. ஆளுங்கட்சியுடன் சேர்ந்துதான் நல்லது செய்யணுமா? தாராபுரத்தில் ஏன் தண்ணீர் வரல? ஒரு முதலமைச்சராக தாராபுரம் வரவில்லை என்கிறார் விஜய்.. அப்படியானால் போலீஸ், பந்தோபஸ்து, பாதுகாப்பு, பேரிகாடு எதற்காக?

அதிமுக - திமுக கூட்டு?
துரோகம் செய்கிறார்கள் என்று இன்றைக்கு வந்து சத்யபாமா சொல்கிறார்.. தவெகவில் இணைவதற்கு முன்பேயே, தாராபுரத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து திமுக, அதிமுக கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை, அன்றே பகிரங்கப்படுத்தியிருக்கலாமே? அதற்குரிய தரவுகளை காட்டியிருக்கலாமே? இன்றைக்கு வரைக்கும் ஒரு ஆதாரத்தைகூட காட்டவில்லையே?
19 எம்எல்ஏக்களை சுயநலமாக எடுத்துள்ளது தவெதான்.. திமுக கூட்டணியிலிருந்து 13 எம்எல்ஏக்களை உருவி, சேர்த்துக் கொண்டது தவெகதான்.. ஐயுஎம்எல், காங்கிரஸ் உட்பட ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து, அங்கிருந்து 13 எம்எல்ஏக்களை சேர்த்து கொண்டீர்கள். 6 அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் செய்து, ராஜினாமா செய்ய வைத்து, சீட் தந்து, விசிலில் நிற்க வைக்கிறீர்கள். இதெல்லாம் அரசியலா?

எடப்பாடி, ஸ்டாலின் பல தோல்வி
சத்யபாமா அழும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? எப்ப பார்த்தாலும், புலம்பி, அழுது, சிம்பத்தியாக பேசி, குதிரை பேரம் நடத்தி, சோபா அரசியல் செய்து, இப்படித்தான் தவெக பெயர் வாங்கியிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி எப்படியும் 14 முறை தோற்றிருப்பார். இருந்தாலும், ஒரு இடத்திலும் சத்யபாமா போல கண்கலங்கி அழுததில்லை.. ஸ்டாலினும்தான் கொளத்தூரில் தோற்றார்.. அதுக்காக இப்படியா நாடகம் நடத்திட்டு இருக்கார்? கண்கலங்குவதிலேயே தவெகவின் தோல்வி பயம் தெரிகிறது.. இதுவே அதிமுகவுக்கு வெற்றிதான்,

தானே முயற்சி செய்து, பிரதமரிடம் பேசி, பின்னலாடை, நூல் உற்பத்தியில் ஜிஎஸ்டி வரியை குறைத்ததாக, இன்று மதுராந்தகத்தில் பேசுவது பொய்யான பிரச்சாரமாகம்.. அரசு வழங்கும் நலத்திட்டங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றனவே தவிர, தலைவர்கள் சொந்தப் பணத்திலிருந்து எதையும் வழங்குவதில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
