எப்படிங்க.. 3000 பக்கம்? உள்ளே என்ன இருக்குது? அதிர்ந்த செந்தில் பாலாஜி! புது கேஸ் போட என்ன காரணம்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கை போடுவதற்கு பின் முக்கிய காரணங்கள் உள்ளதாம்.
அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து அவரை சமீபத்தில் கஸ்டடியில் எடுத்தனர். 5 நாட்கள் விசாரணை செய்துவிட்டு நேற்று முதல்நாள் இரவு செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த 5 நாள் விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை 3000 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் முன்பே இந்த குற்றப்பத்திரிகையில் ஒரு பாதி தயார் செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதாவது ரெய்டின் போதே ஒரு பாதி அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டது. அதன்பின் ரெய்டு முடிந்த செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்த போது இதேபோல் குற்றப்பத்திரிகையில் இன்னொரு கட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்துதான் அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணையின் அறிக்கை, விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்வி , பதில்கள் ஆகியவை கோர்ட்டில் எழுதப்பட்டு அவையும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவை எல்லாம் சேர்த்துதான் 3000 - 4000 பக்கங்கள் வரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தெரியவில்லை: இந்த நிலையில்தான் இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை பகிரும்படி சொல்லி செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கிற்கு பின்வரும் 3 காரணங்கள் சொல்லப்படுகிறது.
1. செந்தில் பாலாஜி இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் வழக்கில் வாதங்களை வைக்க முடியும்.
2. இந்த ஆவணங்களில் இருக்கும் தவறை சுட்டி காட்டி வழக்கில் பெயில் கேட்க அல்லது மேல்முறையீடு செய்ய முடியும்.
3. இவ்வளவு வேகமாக எப்படி 3000 பக்க அறிக்கையை தயார் செய்தனர் என்ற கேள்வி உள்ளது. இதனால் அதில் இருக்கும் தவறுகளை கண்டுபிடிக்கும் திட்டத்தில் செந்தில் பாலாஜி டீம் உள்ளது.
வழக்கு விவரம்: அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஏழாம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஐந்து நாட்கள் காவல் முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, அமலாக்கத்துறை தரப்பில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் டிரங்க் பெட்டியில் தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து கடந்த 12ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கதுறையினர் தாக்கல் செய்த வழக்கு ஆவணங்களான குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது தரப்பு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இதையடுத்து நீதிபதி, அமலாக்கதுறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்பிற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications