"நாட் கில்டி".. குற்றச்சாட்டுகளை மறுக்காத செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை சொன்ன ஷாக் தகவல்
சென்னை: விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடுவதாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்திய வரலாற்றில் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டவர்களில் அதிக கண்டிப்புடன் விசாரிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜிதான் என்று சொல்லும் அளவிற்கு இந்த விசாரணை நடக்கிறது.

அவர் வீட்டில் ரெய்டு நடத்தியது தொடங்கி அவரை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை காட்டிய தீவிரம் வரை இதற்கு உதாரணம். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணை செய்தது. அவரிடம் விடாமல் அமலாக்கத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டது.
அதன்பின் விசாரணை முடிந்த அதே நாளில் அமலாக்கத்துறை 3000 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எந்த விசாரணையிலும் விசாரணை நாள் முடிவிலேயே அமலாக்கத்துறை இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததே இல்லை. ஆனால் இங்கே அமலாக்கத்துறை இதுவரை இல்லாத வேகத்தை காட்டி உள்ளது.
அமலாக்கத்துறை திட்டம்: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மனு: இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதாவது விசாரணையின் போது தன்னை கில்டி அதாவது குற்றவாளி அல்லது நாட் கில்டி அதாவது குற்றவாளி இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் சொல்வது வழக்கம்.
ஆனால் இங்கே செந்தில் பாலாஜி இரண்டையும் சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் தன் மீதான குற்றச்சாட்டையும் அவர் மறுக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. அதோடு சில கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. அவர் வங்கி கணக்கில் முறைகேடாக பணம் இருந்துள்ளது.
இந்த பணம் எப்படி வந்தது என்று அவரிடம் கணக்கு கேட்டோம். ஆனால் அதற்கு அவரால் கணக்கு காட்டவே முடியவில்லை என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications