அதுக்குள்ளே என்ன அவசரம் ஷாலினி.. அந்த நேரத்தில் மருந்து வாங்கி.. பாவம் அந்த 2 குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் கொல்லம் கடைக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தன்னுடைய வீட்டு கிச்சனில் ஷாலினி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது.. ஒரு நொடியில் நடந்த சம்பவத்தால் அடுத்தடுத்து மருத்துவமனைகளுக்கு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஆனாலும் பெரிதாக பலன் கிடைக்கவில்லை.. போலீசார் இதுகுறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்..!!

கொல்லம் மாவட்டம் கடைக்கல் சரிப்பறம்பு விளையில் அமிர்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி. 37 வயதாகிறது.. இவரது கணவர் அனீஷ் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தம்பதிக்கு அமிர்தா, அமர்நாத் என 2 குழந்தைகள் உள்ளனர்.

Snakebite

கேஸ் சிலிண்டர் அருகே பாம்பு

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வீட்டின் கிச்சனில் கேஸ் சிலிண்டரில் ஒரு விஷப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. அதனை கவனிக்காத ஷாலினி கேஸ் சிலிண்டரின் அருகில் நின்றபடி வேலை செய்து கொண்டிருந்தார்.. அப்போது பதுங்கியிருந்த அந்த பாம்பு ஷாலினியை கடித்துவிட்டது.. இதனால் அலறி கீழே விழுந்து துடிதுடித்தார் ஷாலினி.

வீட்டுக்குள்ளேயே நடந்த இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஷாலினியை அஞ்சலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஷாலினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பினார். இதனால் பாம்பு கடித்த பிரச்சினை முடிந்துவிட்டதாக குடும்பத்தினரும் நினைத்து நிம்மதியடைந்தனர்..

ஷாலினி உடல்நலம் பாதிப்பு

ஆனால், 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது... செப்டம்பர் 7-ம் தேதி ஷாலினிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, மறுபடியும் அஞ்சலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்... தன்னுடைய உடல்நல பாதிப்பை சொல்லி, மருந்து மட்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு, வீட்டுக்கே திரும்பி விட்டார்.

ஆனால், அதற்கு பிறகு ஷாலினிக்கு உடல்நிலை ரொம்பவே மோசமாகிவிட்டது.. இதனால் ஷாலினியை வெஞ்சாறுமூட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போதும் ஷாலினி உடல்நிலை முன்னேற்றமில்லை..

இதனால் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த ஷாலினி, நேற்று மதியம் இறந்து விட்டார்.

என்ன காரணம்

ஷாலினியின் உடல் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. கணவர் அனீஷ் வெளிநாட்டில் இருப்பதால், அவர் ஊர் திரும்பிய பிறகு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சாலினி உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி ஷாலினியை வீட்டுக்குள் பாம்பு கடித்துள்ளது.. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால், மருத்துவமனையில், முழுமையாக சிகிச்சை பெறாமல் பாதியிலேயே வீடு திரும்பியதே ஷாலினி மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், கடைக்கல் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+