“ஸ்டாலின் என்னை ஏமாற்றிவிட்டார்.. திமுகவில் வைட்டமின் M தான் முக்கியம்”.. சிம்லா முத்துச்சோழன் பரபர!
சென்னை: திமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தான் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் காப்பாற்றவில்லை என சிம்லா முத்துச்சோழன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார்.

சிம்லா முத்துச்சோழன் விளக்கம்: மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக முன்னணி நிர்வாகியான சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது ஏன் என சிம்லா முத்துச்சோழன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இணைந்த பிறகு சிம்லா முத்துச்சோழன் அளித்துள்ள பேட்டியில், "2008 முதல் திமுகவில் முழுநேரமாக பணியாற்றத் தொடங்கினேன். எனது அரசியல் ஈடுபாட்டை பார்த்து எனக்கு சில பொறுப்புகளை வழங்கினார்கள். 2016ல் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் எனக்கு ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்கள்.
எனக்கு ஸ்டாலின் உறுதி கொடுத்தார்: ஜெயலலிதாவை எதிர்த்து நின்றாலும், திமுகவுக்கு நான் டெபாசிட் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த 1 வருடத்தில் இடைத்தேர்தல் வந்தபோது எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அப்போது என்னை அழைத்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிப்பேன் என மூத்த முன்னோடிகள் முன்னிலையில் எனக்கு உறுதி அளித்தார்.
ஆனால், அதன் பிறகு எனக்கு எந்த தேர்தலிலும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஸ்டாலின் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார். அதனை அவருக்கு நினைவூட்டி பலமுறை கடிதம் கொடுத்தேன். ஆனால், அவர் தரப்பில் இருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை.

திமுக தலைமை பெர்மிஷன் தரவில்லை: எனது அத்தை சற்குண பாண்டியனும், எனது கணவரும் மறைந்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் 6 நாள் சுற்றுப்பயணமாக ஒரு பைக் ரைடு செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்கும் திமுக தலைமை அனுமதிக்கவில்லை. திமுகவில் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலில் திமுகவில் இருந்து விலகியுள்ளேன். மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
அதிமுகவில் நிச்சயம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அந்த நம்பிக்கையோடு தான் வந்திருக்கிறேன். திமுகவில் தற்போது வாரிசுகளுக்கு மட்டும் தான் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அப்பா எம்.எல்.ஏ, எம்.பியாக, அமைச்சராக இருக்கும்போது அவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கிறார்கள். எனக்கு மட்டும் அங்கீகாரம் தர மறுக்கிறார்கள்.
திமுகவில் பணம் தான்: திமுகவில் வைட்டமின் M தான் முக்கியமானதாக உள்ளது. இப்போது உள்ள திமுகவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் வைட்டமின் எம் தான் தேவையாக உள்ளது. அது இல்லாவிட்டால் இங்கு எதுவுமே கிடைக்காது" என காட்டமாகக் கூறியுள்ளார் சிம்லா முத்துச்சோழன்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications