சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடித்து ஆடும் திமுக.. ஜாதி பெயரை நீக்குங்க.. முதல்வர் ஸ்டாலின் கணீர்.. சென்னை 2.0ல் அதிரடி மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் சாலைகளில் ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    Singara Chennai 2.0 திட்டத்தில் அதிரடி மாற்றம்.. ஜாதி பெயர்களை நீக்க உத்தரவு #Politics

    சென்னைக்கு புதிய முகம் கொடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம் இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்

    உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.

    சிங்கார சென்னை

    சிங்கார சென்னை

    முக்கியமாக சென்னையின் பல்வேறு பீச்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் அல்லது மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல தெருக்களுக்கு ஜாதி ரீதியான பெயர்கள் உள்ளன. வன்னியர் தெரு, ஜிஎன் செட்டி ரோடு என்று பிரபல சாலைகள் பல உள்ளன.

    ஜாதி பெயர்

    ஜாதி பெயர்

    இப்படி ஜாதி ரீதியான பெயர்கள் பல்வேறு தெருக்களின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் வளர்ந்த ஒரு நகரம்.. ஜாதி பெயரை சுமந்து நிற்பது என்பது சரியாக இருக்காது. ஒரு சாலை அனைவருக்கமானதாக இருக்க வேண்டும். மாறாக சாதி பெயரை சுமந்து நின்றால், அது வேற்றுமையை குறிக்கும் இடமாக மாறிவிடும். அதிலும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் ஜாதி பெயர்களுடன் சாலைகள் இருப்பது நல்ல விஷயம் கிடையாது. இதனால் இந்த பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஜாதி பெயர்களை நீக்கினால் அது பல்வேறு தரப்பினர் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தும்.

    சென்னை 2.0

    சென்னை 2.0

    ஆனால் விமர்சனங்களுக்கு அஞ்சாமல்.. ஜாதியை நீக்குங்க என்று முதல்வர் தரப்பு இந்த உத்தரவை போட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருக்களிலும் புதிய போர்ட் வைக்கும் போதே, ஜாதி பெயர்களையும் சேர்ந்து நீக்கி வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன.

     ஜாதி பெயர் நீக்கம்

    ஜாதி பெயர் நீக்கம்

    இதில் ஜாதி ரீதியாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. இவை மாற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக அடையாற்றில் அப்பாவு கிராமணி என்ற பெயரில் ஜாதி பெயரான கிராமணி நீக்கப்பட்டு உள்ளது. மாற்றாக அப்பாவு (கி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகைகளில் தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு ஆகியவை இடம்பெறுகின்றன. மொத்தமாக பெயர் பலகைகளை மாற்ற சென்னையில் 8.43 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why did street names with caste surnames remove under Singara Chennai 2.0 scheme? சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் சாலைகளில் ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X