சட்டசபைக்கு வெளியே.. பாக்ஸ் பாக்ஸா.. என்னங்க இது.. திமுக - அதிமுகவை விழி பிதுங்க வைத்த பாமக எம்எல்ஏ!
சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபைக்கு வெளியே நடைபெற்ற சம்பவம் ஒன்று எம்எல்ஏக்கள் இடையே கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர் காரசாரமாக நடந்து இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட அமர்வில் தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான துறை ரீதியான விவாதங்கள் நடந்து வருகின்றன.
தினமும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காரசாரமான கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தினமும் ஒரு துறை என்று அமைச்சர்கள் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டசபையில் இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
இதில் அமைச்சர் சேகர் பாபு துறை ரீதியான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதோடு பல திட்டங்களை பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சட்டசபை கூட்டம்: இந்த முறை சட்டசபை கூட்டத்தொடர் தினமும் நீண்ட நேரம் நடக்கிறது.
மானிய கோரிக்கை விவாதம் பிரச்சனை இன்றி நடக்கிறது. நேற்று கூட தமிழ்நாடு சட்டசபையில் விவாதம் இரவு வரை நீண்டது. நேற்று இரவு வரை கேள்வி நேரம் விடாமல் நடத்தப்பட்டது.
அதேபோல் எல்லா விதமான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் விடாமல் அனுமதிக்கப்பட்டது. முன்பெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அதிகம் அனுமதிக்கப்படாது. ஆனால் இப்போதெல்லாம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட நிறைய உறுப்பினர்கள் நேற்று அவையில் பேசினார்கள்.

சுவாரசிய சம்பவம்: இதற்கு இடையில்தான் நேற்று தமிழ்நாடு சட்டசபைக்கு வெளியே நடைபெற்ற சம்பவம் ஒன்று எம்எல்ஏக்கள் இடையே கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் நேற்று சட்டசபைக்கு வெளியே பாமகவை சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் லாரி ஒன்றில் வந்து இறங்கினார்.
சட்டசபை முடியும்முன் மாலை நேரத்தில் அவர் லாரியுடன் அங்கே நின்று கொண்டு இருந்தார். அப்போது சட்டசபைக்கு வெளியே இடைவேளைக்காக வந்த எம்எல்ஏக்கள் இவரை வியப்புடன் பார்த்தனர்.
பாமக எம்எல்ஏ அருள் லாரியில் இருந்து பாக்ஸ் பாக்ஸாக மஞ்சள் நிற பெட்டிகளை எடுத்து கொண்டு வந்தார். இவை அனைத்தும் மாம்பழங்கள் ஆகும்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சேலத்து மாம்பழங்கள் ஆகும். இந்த மாம்பழங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் பாமக எம்எல்ஏ அருள் கொடுத்தார்.
திமுகவினர், அதிமுகவினர் என்று பாரபட்சம் பார்க்காமல், கட்சி வேறுபாடு பார்க்காமல் இந்த மாம்பழங்களை அவர் எல்லோருக்கும் கொடுத்தார்.

ஒரு பெட்டிக்கு கிட்டத்தட்ட 10 பழங்கள் வீதம் இருந்தன. சேலத்தில் இருந்து இதற்காக 5 டன் மாம்பழங்களை இவர் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.
சட்டமன்றத்தில் மட்டுமின்றி சட்ட மன்ற விடுதியில் உள்ள எம்எல்ஏக்கள் இல்லங்களுக்கு சென்று அங்கும் அவர்களுக்கு மாம்பழங்களை வழங்கினார். கடந்த ஆண்டும் இவர் இதேபோல் சேலத்து மாம்பழங்களை எம்எல்ஏக்களுக்கு வழங்கினார்.
ஒரு எம்எல்ஏ அன்பாக வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு இவர் சேலத்து மாம்பழம் வாங்கி கொடுக்க இந்த ஆண்டும் அதே பழக்கத்தை தொடர்ந்து வருகிறார்.
பாமக எம்எல்ஏ அருளின் இந்த செயல் மற்ற எம்எல்ஏக்கள் இடையே கவனத்தை ஈர்த்தது.












Click it and Unblock the Notifications