ஆக்சன் எடுத்த அப்பாவு! கோபமாக பேசிவிட்டு.. பட்டென வெளியேறிய வானதி! "அப்போ சரிதான்".. ஸ்டாலின் சுளீர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று கிறிஸ்துவ இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பாஜகவை கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி இன்று தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஜாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு ஒரு பக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு மாநில அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகபட்ச இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கு தொடர்ந்து ஆதி திராவிடர் பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆதி திராவிடர்கள் எஸ்டி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) சான்றிதழ் அளிக்கப்படும்.
இதனால் இவர்களுக்கு எஸ்டி ரீதியாக கிடைக்கும் இடஒதுக்கீடு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்து உள்ளார்.

பேச்சு: தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க வேண்டும்.
வரலாற்று ரீதியாகவே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியாக இருக்கும். அதன் மூலமாக அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
சமூகரீதியாக தரப்பட்ட உரிமைகளை தர மறுப்பது சரியல்ல. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்"
இதனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பாஜக எதிர்ப்பு: இந்த சட்டத்தை பாஜக அவையில் கடுமையாக எதிர்த்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை கடுமையாக எதிர்த்து அவையில் பேசினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து அவையில் இருந்து வானதி சீனிவாசன் கோபமாக வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் மற்ற 3 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கு தீர்மானம் ஏனோதானோ என கொண்டுவரப்படவில்லை, இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம்.
பா.ஜ.க வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது, என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications