டிசிஎஸ் தரவு மையத்தை தமிழ்நாடு ஏன் தவறவிட்டது? டிஆர்பி ராஜாவுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் தரவு மையம் குறித்து திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "தமிழ்நாடு இதை ஏன் நழுவவிட்டது என்பதை நாம் கேட்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. முதலாவதாக, இதுபோன்ற பிரம்மாண்ட முதலீட்டு முடிவுகள் 3 மாதங்களில் எடுக்கப்படுபவை அல்ல. அவை பல சுற்றுகளாக நடைபெறும் விவாதங்கள் மற்றும் தீர்மானங்களுடன் மிக நீண்ட கால அவகாசத்தில் உருப்பெறுபவை என்று தொழிலதிபரும், ஜோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் மேலும் கூறுகையில், "இரண்டாவதாக, நான் இந்தியா முழுவதும் பயணம் செய்யும்போது, "திமுக அரசு உங்கள் மீது இவ்வளவு விரோதப் போக்கைக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் பிராமணராகப் பிறந்ததற்காக உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கும்போதும், நீங்கள் ஏன் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?" என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.

Why did Tamil Nadu miss out on the TCS data center Sridhar Vembu responds to TRB Rajaa

நான் அவர்களிடம் கூறுவது இதுதான்: 'தமிழ்நாடு ஒரு மிகச்சிறந்த மாநிலம்; திமுக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அந்த பரந்த தமிழ் சமூகம் சோஹோ (Zoho) நிறுவனத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் ஆதரவாக உள்ளது.' திமுக அரசின் விரோதப் போக்கு இருந்தபோதிலும், இந்த ஆட்சியின்போதும் கூட நான் பாரதம் முழுவதும் தமிழ்நாட்டிற்காக பிரச்சாரம்/சந்தைப்படுத்தல் செய்துதான் வருகிறேன்.

திமுக அமைச்சர்கள் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற பாணியில் வட இந்தியர்களை "வடக்கான்கள்" என்று விமர்சித்தபோதும், இங்குள்ள வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களைக் கேலி செய்தபோதும், அவர்களின் துணை முதலமைச்சர் சனாதன தர்மத்தை "ஒழிப்போம்" என்று வெளிப்படையாகப் பேசியபோதும் (கேரளாவின் மார்க்சிஸ்டுகள் கூட இப்படிப் பேசமாட்டார்கள்), அவை பாரதத்தின் பிற பகுதிகளில் கவனிக்கப்படாமல் போகவில்லை. திமுக எள்ளி நகையாடும் அந்த "வடக்கான்கள்" உட்பட அனைத்துத் தரப்பு தொழிலதிபர்களும் இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும், மத்திய அரசின் திட்டம் எதுவாக இருந்தாலும் - அது நீட் தேர்வாகட்டும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளாகட்டும், இந்தி மொழியாகட்டும் - எதையும் எதிர்ப்போம் எனத் தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்திக் காட்டும் திமுகவின் பாணியும் இங்கு நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த விஷயத்தில் மிகவும் எதார்த்தமான (Pragmatic) அணுகுமுறையைக் கொண்டுள்ளன. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கூட என்னிடம், "நீங்கள் ஏன் உங்களை அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்களாக நினைக்கிறீர்கள்?" என்று கேட்பார்கள்; திமுக செய்த தவறுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று!

"நாங்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து முதலீடுகளை ஈர்ப்போம், இந்தியாவின் பிற பகுதிகள் எங்களுக்குத் தேவையில்லை" என்பதுதான் திமுகவின் நம்பிக்கையாக இருந்தது போலத் தெரிகிறது. சரி, இந்தியாவின் பிற பகுதிகளும் இந்த அணுகுமுறையைக் குறித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
ஜோசப் விஜய் அவர்கள், பாஜகவை எதிர்க்கும் அதே வேளையில், திமுக பின்பற்றி வந்த வட மாநில எதிர்ப்பு மற்றும் "மறைமுகப் பிரிவினைவாத" மனநிலையைக் கைவிட்டு, மிகவும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கையாள்வதைப் பார்ப்பது புத்துணர்ச்சியளிக்கிறது.

விஜய் அவர்கள் வட இந்தியாவிலும் பேராதரவைப் பெற்றுள்ளார் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்; ஒரு தமிழனாக இதில் நான் பெருமையடைகிறேன். திமுக உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு நன்மையை விரும்பினால், வட இந்திய விஷயங்கள் மீதான இந்தக் குருட்டுத்தனமான வெறுப்பைக் கைவிட்டு, எதார்த்தமான அணுகுமுறையை ஏற்க வேண்டும். சனாதன தர்மம், இந்தி, "வடக்கான்கள்" போன்ற வெறுப்புப் பேச்சுகள் இல்லாமலேயே உங்களால் பாஜகவை எதிர்க்க முடியும்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+