சாதாரண வார்த்தையே தடுமாறுதே! என்னாச்சு விஜய்க்கு.. பேச்சில் இவ்வளவு குளறுறாரே.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் கடந்த 13 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பினை நடத்தி வருகிறார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்திக்கும் விஜய் இன்று நாமக்கல் சென்று இருந்தார். அவர் இன்று பேச்சில் கடுமையாக திணறியது, அடிக்கடி தடுமாறியது விவாதம் ஆகி உள்ளது.

விஜய் தனது பேச்சில், நாமக்கல் என்றாலே முட்டை உற்பத்தி தான் . தலை நிமிர்ந்து சொல்லடா.. தமிழன் என்று சொல்லடா.. என்று சொன்ன நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊரும் இது தான்.. கடந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள் செய்தார்களா..

தமிழக வெற்றிக் கழக பயணம் - விஜய் பேச்சு

அதிமுக பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையென்று எல்லோருக்கும் தெரியும். அதேசமயம் திமுக குடும்பம், பாஜகவோடு மறைமுக உறவுக்காரராக இருக்காங்க என்பதை தயவு செய்து மறந்துடாதீங்க.. வரும் தேர்தலில் நீங்க திமுகவுக்கு ஓட்டு போட்டால், அது பாஜகவிற்கு ஓட்டு போட்ட மாதிரி

தமிழகத்திற்கு தேவையானதை செய்ததா இந்த பாஜக அரசு.. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டாங்களா.. தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை தந்துவிட்டார்களா.. ஒன்றே ஒன்று மக்களே.. இது ரொம்ப முக்கியம்.. திமுக குடும்பம் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்து இருக்கிறார்கள்.. நண்பா.. நண்பிகளே.. தோழா, தோழிகளே.. என்மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சு இருக்கீங்களா? ஒரு கை பார்த்துடலாம்.. நானும் இரண்டு, மூணு வாரத்துக்கு முன்னால என்னமோ, ஏதோன்னு நினைச்சேன்.. சத்தியமா பார்த்துடலாம்.. Confident ஆ இருங்க.. வெற்றி நிச்சயம்.

விஜய் நாமக்கல்

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். திமுக அரசு மாதிரி மறைமுக உறவுக்காரர்களாக பாஜகவோடு எப்போதும் இருக்கமாட்டோம். அதேபோல, மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மான்னு சொல்லிட்டு ஜெயலலிதா Madam சொன்ன அனைத்தையும் மறந்துட்டு இப்போது பொருந்தாக் கூட்டணி வைத்துள்ளவர்கள் மாதிரியும் நாங்கள் இருக்கமாட்டோம்.

Why did Tamilaga Vetri Kazhaga Vijay make too many mistakes in his Namakkal Speech

நம் டிவிகே ஆட்சி அமைந்ததும் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.. முக்கியமாக இந்த மூன்று விஷயங்களை டிவிகே செய்யாது.. அது என்னவென்றால், பாசிச பாஜக அரசோடு எப்போதும் நாம் ஒத்து போக மாட்டோம்.. திமுக அரசுபோல் அன்டர்கிரவுண்ட் டீலிங் செய்துகொள்ள மாட்டோம்..

வெளியில் தான் இருவரும் அடித்துக் கொள்வார்கள்.. ஆனால் உள்ளுக்குள்ளே ரகசிய கூட்டணி வைத்து இருக்கிறார்கள். வேண்டாம் மக்களே, யோசிங்க.. அதனால் திரும்பவும் சொல்கிறேன். 2026-ல் ஒன்று தவெக இன்னொன்று திமுக.. இரண்டே இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே.. அது ஒன்னு டிவிகே, இன்னொன்று திமுக.. வெற்றி நிச்சயம், என்று விஜய் குறிப்பிட்டார்.

விஜய் தடுமாற்றம்

அதே சமயம் விஜய் இன்று பேச்சில் கடுமையாக திணறியது, அடிக்கடி தடுமாறியது விவாதம் ஆகி உள்ளது.

சென்னை மாகாணம் என்று சொல்வதற்கு பதிலாக மகாணம்
உணர்ச்சியூட்ற மண்ணும் என்று சொல்வதற்கு பதிலாக மட்டும்
பிற்படுத்தப்பட்ட என்று சொல்வதற்கு பதிலாக பிற்படுத்தப்பப்பட்ட
அமைக்கணும் என்று சொல்வதற்கு பதிலாக அமைக்கிக்கணும்
நிலையங்கள் என்று சொல்வதற்கு பதிலாக திலையங்கள்

பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்வதற்கு பதிலாக பாடிதிக்கப்பட்டுள்ளனர்
தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று சொல்வதற்கு பதிலாக தேர்தல் அறிக்கையில் செல்வோம்
ஒத்தையடி பாதை போடப்படும் என்று சொல்வதற்கு பதிலாக ஒத்தையடி பாதை போதப்படும்
ம.. ம... மருத்துவ வசதி என்றும் திணறியபடி கூறினார்.
TVK மறுபடியும் ஆட்சியமைக்கணுமா? சாரி, இப்போது ஆட்சியமைக்கணுமா? என்றும் குழம்பி பேசினார்.

விஜய் விளக்கம்

இதை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கவனித்த நிலையில், விஜய் மன்னிப்பு கேட்டார். விஜய் தனது உரையை முடித்தபின் "சாரி, நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது. மைக் காரணமாக கொஞ்சம் பேச்சு இங்கும் அங்கும் முன்பின் மாறிவிட்டது. அதனால் ரிதமை பிடிக்க சற்று நேரமாகி விட்டது; நன்றி" எனக்கூறி அங்கிருந்து சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+