விடாப்பிடியாக நின்ற விஜய்.. அதிமுக கூட்டணிக்கு தவெக நோ சொன்னது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கா! ஷாக்
சென்னை: தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நடிகர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் சமீபத்தில் ஊடக பேட்டி ஒன்றில் அறிவித்தார்.
அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

முதல்வர் பதவி
விஜய் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது என்ன ஆனாலும் கண்டிப்பாக முதல்வர் வேட்பாளர் பொறுப்பு முக்கியம் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். இதன் காரணமாகவே அதிமுக கூட்டணிக்கு விஜய் திட்டவட்டமாக நோ சொன்னார் என்கிறார்கள். அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் சமீபத்தில் ஊடக பேட்டி ஒன்றில் அறிவித்தார்.
இதன் காரணமாகவே விஜய் தலைமையில் அ.தி.மு.க. இல்லாத ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஓ. பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தல்: தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி முயற்சி
விஜய்யின் த.வெ.க., தி.மு.க.வின் வாக்கு வங்கிகளான சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் குறிவைத்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக உள்ள திமுக வாக்குகளைப் பிரித்து, த.வெ.க.வை ஒரு வலிமையான அரசியல் கட்சியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல்களில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என அந்த கட்சி நம்புகிறது..
கூட்டணியின் பின்னணி: அரசியல் வியூகங்களும் தாக்கங்களும்
டெல்லி வட்டாரங்களின் தகவல்படி, "ஆபரேஷன் V" என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஒரு மூத்த அரசியல் தலைவர் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். தி.மு.க.வின் சிறுபான்மையினர் ஆதரவைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை கூட்டணி அமைந்தால், தென் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும். மேலும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதில் தி.மு.க. சிரமங்களை சந்திக்க நேரிடும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தன. இவர்கள் இருவரும் அ.தி.மு.க.-வை எதிர்த்து த.வெ.க.வுடன் இணைந்தால், முக்குலத்தோர் வாக்குகளை த.வெ.க.-வுக்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியைத் தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதேபோல் விஜய் கிரிஸ்துவர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் இங்கே அதிகம் செல்லலாம்.
தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக மற்றும் அதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யுடன் இணையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications