திமுகவை ஓட ஓட விரட்டும் விஜய்.. பாராட்டிய தமிழிசை! ஆனால் அடுத்த நொடியே தவெகவுக்கு வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய முதல்வர் விஜய்யை பாராட்டியுள்ளார். ஆனால், அதே நேரத்தில் தவெக காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பதையும், குதிரைப் பேரத்தையும் சுட்டிக்காட்டி விஜய்க்கு செக் வைத்துள்ளார். கடந்த வாரம் வரை விஜய்யை விமர்சித்து வந்த தமிழிசையின் இந்த திடீர் பாராட்டு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது...!!

தமிழ்நாடு அரசியலில் எப்போதும் முதல்வர் விஜய்யை ஆதரித்து பேசுபவர் என்ற பிம்பம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கிடையாது. ஏனென்றால், பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

Tamilisai Soundararajan Vijay TVK DMK

கடந்த வாரம் கூட செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள், அந்த வாய்ப்பை அவர் முதலில் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு

அதுமட்டுமல்லாமல், விஜய் கட்சியினரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய தமிழிசை, பிரதமர் மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திமுகவின் கடந்தகால ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியதும், தமிழிசையின் பேச்சில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய்யை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.

திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் விஜய்

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திமுக செய்த ஊழல்களைச் சொல்லி முதல்வர் விஜய் அவர்களை ஓட ஓட விரட்டுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, வீராணம் முதல் விஞ்ஞான ஊழல் வரை ஊழலில் வளர்ந்தது தி.மு.க., ஊழல் குறித்து பேசினால் ஆதாரம் கேட்போருக்கு, தற்போது ஆதாரத்துடன் முதல்வர் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். இனி ஊழல் செய்தால் அது ஒரு நாள் வெளிப்படுத்தப்படும் என்பதை இளைஞர்கள் மத்தியில் பாடமாக புகட்டியுள்ளார். தவெகவுடன் எனக்கு மாற்றுக் கருத்தும், கொள்கை முரண்பாடும் இருந்தபோதிலும் ஊழல் விவகாரங்களை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், தி.மு.க.,வினர் வெளியேற முடியாமல் அங்கேயே தர்ணாவில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரசுடன் தவெக கூட்டணி

ஆனால், விஜய்யை பாராட்டியதோடு தமிழிசை நிறுத்தவில்லை. அடுத்த நொடியே தவெக-வுக்கு ஒரு முக்கியமான செக்கையும் வைத்திருக்கிறார். ஊழலைப் பற்றி பேசும் தவெக, குதிரைப் பேரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் அந்த கட்சி உண்மையாக ஊழலுக்கு எதிரானது என்று மக்கள் நம்புவார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கும் மேலாக, ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். அதாவது, திமுகவின் ஊழலை விஜய் ஆதாரங்களுடன் பேசுவதை வரவேற்கும் தமிழிசை, அதே நேரத்தில் விஜய் கூட்டணி அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

பாராட்டா? வரவேற்பா?

இதனால், தமிழிசையின் தற்போதைய பேச்சு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. விஜய் திமுகவை தாக்கியதால் பாராட்டு.. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் குதிரைப் பேரம் குறித்து கேள்வி என ஒரே பேட்டியில் இரண்டு வெவ்வேறு அரசியல் செய்திகளை அவர் பதிவு செய்திருக்கிறார்.

இது வெறும் விஜய்க்கான பாராட்டா? அல்லது திமுகவுக்கு எதிராக விஜய் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்றுக்கொண்டே, தவெக தனது அடுத்த அரசியல் நகர்வுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையா என்பதுதான் இப்போது எழும் கேள்வியாக உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+