பாஜக, பாமக நடுநிலை வகித்தது ஏன்.. விஜய்க்கு எதிரான வாக்கெடுப்பில் மிகப்பெரிய சந்தேகம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 18வது முதல்வராக பதவியேற்ற விஜய், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சபையில் நிரூபித்தார். விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை அதிமுகவின் ஒரு தரப்பினர் 22 பேர் எதிர்த்தனர். மீதமுள்ள 25 பேர் ஆதரித்துள்ளனர். அமமுகவின் ஒரே ஒரு உறுப்பினர் காமராஜ் ஆதரவு தெரிவித்தார். அதேநேரம் திமுகவின் 59 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பாமகவின் 4 பேர், பாஜகவின் ஒருவர் என ஐந்து பேர் ஆதரவும் தெரிவிக்கவில்லை.. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பாஜக, பாமக நடுநலை வகித்தன் பின்னணியில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. இந்த கட்சி ஆட்சியமைக்க அதாவது 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோருடன் ஆதரவுடன், பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மனு அளித்தார் விஜய். அதன்பின்னர் ஆளுநர் அர்லேகரோ ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடந்தது. அதில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில், சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் செய்யப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிமுகவில் சிவி சண்முகம், வேலுமணி,லீமா ரோஸ், விஜயபாஸ்கர் உள்பட சுமார் 25 எம்எல்ஏக்கள் விஜய்யை ஆதரிக்க முடிவு செய்து வாக்களித்தனர். அதேபோல் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த தீர்மானத்தை அதிமுகவின் 22 பேர் எதிர்த்தனர். அமமுகவின் ஒரே ஒரு உறுப்பினர் காமராஜ் ஆதரவு தெரிவித்தார். அதேநேரம் திமுகவின் 59 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பாமகவின் 4 பேர், பாஜகவின் ஒருவர் (போஜராசன் ) என ஐந்து பேர் ஆதரவும் தெரிவிக்கவில்லை இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 பேர் ஆதரவுடன் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றது.
இந்த தீர்மானத்தை பாஜக, பாமக நடுநிலை வகித்ததன் பின்னணியில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி தான் அக்கட்சியின் பொதுச்செயலாளர், அவர் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அப்படியான சூழலில்அவரது கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக எதிர்ப்பு தான் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் நடுநிலை என்று அறிவித்துள்ளன.
பாஜகவை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டின் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏன் நடுநிலை வகித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. நடுநிலை என்பதும் கிட்டத்தட்ட ஆதரவு போல் தான்.. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆளும் கட்சிக்கு இல்லை என்கிற நிலையில் நடுநிலை வகித்தால், அது ஆளும் அரசுக்கு சாதகமாக முடியும். அப்படியான நிலை தான் விஜய்க்கும் இருந்தது. இந்நிலையில் பாஜக நடுநிலை வகித்துள்ளது.
அதேபோல் பாமகவிற்கு 4எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அவர்கள் நடுநிலை வகித்தது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய்யை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை போல், அவரது கூட்டணியில் உள்ள பாமகவும் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.. ஏன் எதிர்க்காமல் நடுநிலை வகித்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.. வரும் காலத்தில் பாமக, பாஜக, தவெக அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி நடந்தால் காங்கிரஸ் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
ஏனெனில் வேலுமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக அணி இப்போது தவெக பக்கம் வந்துள்ளது. இவர்கள் ஒரு காலத்தில் பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள்.. அதேபோல் பாமகவும் பாஜகஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்தது. எனவே இனிஎன்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications