வானதியை முதல்வர் ஸ்டாலின் ஏன் வார்னிங் செய்தார்? இது அழகா?.. குண்டை தூக்கி போட்ட நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு குறித்து விமர்சித்துள்ளார்
சென்னை: வானதி சீனிவாசனை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து பேசியதாக, நயினார் நாகேந்திரன் குண்டை தூக்கி போட்டுள்ளது, தற்போது வரை புகைந்து வருகிறது.
கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் இன்னும் 4 மாதங்களுக்கு மத்திய அரசு சார்பில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருச்சி வந்தார்.

நயினார் நாகேந்திரன்
இந்த திட்டத்தைப் பார்வையிடுவதற்காக திருச்சி வரகனேரியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது: "மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி தமிழக மக்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன்
அந்த நிலுவை தொகையை பெற்றுத்தர தமிழக பாஜகவும் தன்னுடைய முயற்சியை மேற்கொள்ளும். எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசியபோது ஒன்றை சொன்னார். அது தவறு என்றால், "அப்படி பேசக் கூடாது, அது மரபு இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கலாம்.. ஆனால், அதற்கு பதிலாக எம்எல்ஏவை எச்சரித்து பேசியது அவசியம் இல்லை. அந்தப் பேச்சு முதல்வரின் தகுதிக்கு அழகல்ல.

பாஜக நிலைப்பாடு
தமிழகத்தில் 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்று போனது. அன்று காங்கிரஸ் கட்சி தோல்வியடைய இந்தி திணிப்பும் ஒரு முக்கிய காரணம்... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இல்லை... தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் விருப்பப்பட்டால் மட்டும் இந்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஆகும்.

இந்தி திணிப்பு
ஆனால், மத்திய அரசு தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. முன்னதாக, அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது தொடர்பாக தமிழக சட்டபேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.

அயோத்திய மண்டபம்
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர், "ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி இவை குறித்தெல்லாம் பேச வேண்டும்.. அயோத்திய மண்டபம் விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி அதன்மூலமாக பாஜகவை பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்பதை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

வானதி சீனிவாசன்
முதல்வரின் இந்த பேச்சு பொதுவானதே என்றும், இதில் வானதியை எச்சரிக்கும் அளவுக்கு அவர் எதையுமே பேசவில்லையே? ஒரு முதல்வர் இதைகூட அறிவுறுத்தக்கூடாதா? திமுக அரசு எதை செய்தாலும், ஏன் இப்படி பாஜக அவதூறு கிளப்புறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் தலைவர்கள் அனைவருமே இந்தி திணிப்புக்கு எதிராக பேசிவரும் நிலையில், திராவிட கட்சிகளில் பயணித்த நயினார் நாகேந்திரன் மட்டும் இப்படி அதிரடி காட்டியது ஏனோ என்றும் சிலர் சந்தேகத்தை முன்வைத்து வருகிறார்கள்.!












Click it and Unblock the Notifications