மகளிர் உரிமைத் தொகை.. புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஷாக்.. இன்னும் தகவல் வரலையே.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்னும் அது தொடர்பான பதில் கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பம் செய்த பல பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதுவரை யாருக்கும் பதில்கள் அனுப்பப்படவில்லை.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கான பதில்கள் அனுப்பப்படவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்னும் அது தொடர்பான பதில் கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பம் செய்த பல பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதிலும் இன்னமும் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விரிவாக்கம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள், நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இந்த உரிமைத் தொகை பெறத் தகுதியற்றவர்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறதி நோய், பார்கின்சன் நோய், தசைச்சிதைவு நோய், மற்றும் தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறாத தகுதியுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் புதிய பயனாளிகள்

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும், 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக சில சலுகைகள் வழங்குவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேலும் பல பெண்கள் பயனடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+