"அரசியல் புரோக்கர்கள்".. இதுக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க.. உதயநிதிக்கு வந்ததே கோபம்.. கடும் விளாசல்!
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு காரணமாக கடுமையான மோதல்கள், பிரச்சனைகள், உட்கட்சி பூசல்கள் நிலவி வருகின்றன. அதிமுகவில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் இந்த பக்கம் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கோபமாக ட்விட் ஒன்றை செய்து இருக்கிறார்.
Recommended Video
அரசியல் புரோக்கர்கள் என்று கூறி உதயநிதி கடுமையான விமர்சனத்தை ட்விட்டரில் வைத்து இருக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் ஆளும் திமுக அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த போவதாக கடந்த சில மாதங்களாவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
முக்கியமாக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை மாற்றம்
திமுக அரசு பதவி ஏற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. இதையடுத்து ஃபார்பார்மன்ஸ் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் நடக்க போவதாக செய்திகள் வந்தன. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் முக்கியமான பதவி கிடைக்கும் என்றும் செய்திகள் வந்தன. எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில செயல்படாத அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் கூட கூறப்பட்டது.

அறிவிப்பு இல்லை
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக செய்திகள் வந்தும், அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில்தான் உதயநிதிக்கு எதிராக அரசியல் விமர்சகர்கள் சிலர் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக கூடாது என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது திமுகவிற்குதான் சிக்கலாக முடியும் என்று விமர்சனம் செய்தனர்.

எதிர்ப்பு
அதோடு பெரிய படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் பிலிம்ஸ் ரிலீஸ் செய்வதையும் சில அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். ரெட் ஜெயிண்ட் பிலிம்ஸ் நிறுவனம் சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு படங்களை ரிலீஸ் செய்தது. இதை பலரும் கண்டித்து வருகின்றனர். சினிமா துறையில் உதயநிதி ஸ்டாலின் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக ரெட் ஜெயிண்ட் பிலிம்ஸ் பற்றி அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர்.

அரசியல் புரோக்கர்
இந்த நிலையில்தான் அரசியல் புரோக்கர்கள் என்று கூறி உதயநிதி கடுமையான விமர்சனத்தை ட்விட்டரில் வைத்து உள்ளார். அதில், அரசியல் புரோக்கர்களின் கருத்துக்களுக்கு தயவு செய்து பதில் சொல்லாதீர்கள். அவர்களுக்கு எதிர்வினையாற்றாதீர்கள்! அவர்களை புறக்கணித்துவிட்டு நாம் நம் வேலையைச் செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். சில அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில்தான் உதயநிதி இந்த போஸ்டை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications