மகர லக்னத்தில் புதன் ஓரையில் துணை முதல்வராகும் உதயநிதி! ராசி என்ன தெரியுமா? சிறப்புகள் என்ன?
சென்னை: நல்ல நேரத்தில் புதன் ஓரையில் மகர லக்கனத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருடைய ராசி என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஓகே ஓகே படத்தில் நடித்திருந்தார். ரெட் ஜெயன்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தனது தாத்தா கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வந்தார்.

அதிமுகவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் இளைஞரணித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திறமையாக பிரச்சாரம் செய்தார்.
ஒற்றை செங்கல்லை காட்டி மதுரை எய்ம்ஸ் விஷயத்தை பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் 2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தினார். மேலும் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை இனிதே நடத்தி முடித்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வந்தது. முதல்வர் ஸ்டாலினிடமே மூத்த நிர்வாகிகளும் மூத்த அமைச்சர்களும் பகிரங்கமாக கேட்டனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா போவதற்குள் இந்த விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் மாற்றமா என ஸ்டாலினிடம் கேட்ட போது, அப்படியா என எதிர் கேள்வி கேட்டார். இதையடுத்து அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் வந்ததும் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஆகவில்லை.
இது குறித்து கேட்ட போது மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் குறித்தும் துணை முதல்வராக உதயநிதி நியமனம் குறித்தும் நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்றைய தினம் மாலை 3 முதல் 4 மணிக்குள் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அதென்ன 3 டூ 4 மணி என கேட்கிறீர்களா? ஜோதிடத்தில் நல்ல நேரம் பார்த்து உதயநிதி பதவியேற்கிறார் என சொல்லப்படுகிறது. உதயநிதி , மகர லக்னத்தில் புதன் ஓரையில் துணை முதல்வராக பதவியேற்கிறார். உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 27ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய ராசி ரிஷபம் ஆகும்.
ரிஷபம் முதல் தனுசு வரை 8 கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். நவ கிரகங்களில் ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.
உதயநிதி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவைவிட புகழ் பெறுவார். தாத்தா கருணாநிதியை போல் சிறந்த வெற்றி பெறுவார் என்றும் ஒரு ஜோதிடர் கூறியிருந்தார். இனி உதயநிதிக்கு எல்லாமே ஏற்றம்தான் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications