அஜித் செய்த "சைலண்ட்" உதவி.. உதயநிதி திடீரென செய்த போஸ்டுக்கு பின்.. வேறு ஒரு காரணம்! விஜய்க்கு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு இடையே.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் பற்றி ஒரு போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்டுக்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

udhayanidhi stalin vijay ajith kumar

தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமூடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமூடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.

முகமூடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக.

யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

திமுக விமர்சனம் விஜய்: நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு இடையே.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் பற்றி ஒரு போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்டுக்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்., என்று கூறி உள்ளார்.

என்ன காரணம்: நடிகர் அஜித்.. தமிழ்நாடு @SportsTN_ (SDAT) Logo-வை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது மட்டுமல்லால்.. தமிழக அரசுக்கு வேறு ஒரு மாதிரியான உதவியையும் செய்துள்ளார். அதன்படி #Formula4 Chennai Racing Street Circuit போட்டிக்கு மறைமுகமாக சில உதவிகளை செய்துள்ளார். அவரின் இந்த உதவிக்கெல்லாம் கைமாறாகவே உதயநிதி அஜித்தை பாராட்டி உள்ளார் என்கிறார்கள்.

உதயநிதி இப்போது இந்த போஸ்டை செய்ததற்கு பின் சில அரசியல் காரணங்கள் உள்ளன. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. அஜித் செய்த உதவியும்தான் காரணம் என்கிறார்கள் திமுக தரப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+