ஏமாத்திட்டாங்களே.. இரவோடு இரவாக.. அரசு ஊழியர்களுக்கு போன கெட்ட செய்தி.. கனவெல்லாம் காலி
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு இடையே அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவோடு இரவாக முக்கியமான அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று சென்றது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அது பாதி பட்ஜெட்.. நேற்று தாக்கல் செய்யப்பட்டது முழு பட்ஜெட். 2024 லோக்சபா தேர்தல் முடிந்து பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலுக்கு பின் மோடி 3.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதில் அதிர்ச்சி அளிக்கும் முடிவு ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள்: 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன் அமைக்கப்பட்ட பின் அதன் முடிவின் பெயரில் வருமான வரி உயர்வில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளது..
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த கமிஷன் தொடர்பான அறிவிப்பு எதையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
மத்திய அரசு: விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்படும். அவர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவே 8வது கமிஷன் திட்டம் இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பதால் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகிதத்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். இந்த முறை தேர்தலை மனதில் வைத்து அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications