டிரம்ப் வேலையை காட்டுறாரே.. உளவு "முதலையை" இந்தியா அனுப்பிய அமெரிக்கா.. அஜித் தோவலை பார்த்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். சமீபத்தில்தான் இந்த பதவியை பெற்ற துளசி நேரடியாக வந்து அஜித் தோவல் உடன் சந்திப்பு நடத்தினார்.

பயங்கரவாதம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Narendra Modi Donald Trump

துளசி கப்பார்ட் இந்த பதவியை பெற்ற பின் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும் இது. இரண்டு நாட்டு உறவு தாண்டி உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் இதில் பல ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் இந்த ஆலோசனைகள் எல்லாம் மூடப்பட்ட அறையில் நடத்தப்பட்டது. உண்மையில் உள்ளே என்ன பேசினார்கள் என்ற அதிகாரபூர்வ அறிக்கைகள் வெளியாகவில்லை.

ராணுவ பாதுகாப்பு

ராணுவ பாதுகாப்பு ரீதியாக இந்தியா - அமெரிக்கா நெருக்கமாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இதன் மூலம் எஃப்-35 போர் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு சாதகங்கள் ஏற்படும்.

பாகிஸ்தான் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ​​இந்தியாவிற்கு மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது தவறானது. இதனால் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலையில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் இராணுவ ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். இதனால் எங்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவிடம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இருப்பது பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடியை வரும் காலத்தில் கொடுக்கும், என்று கூறி உள்ளது. இதற்கு சீனாவும் தற்போது கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆசியா - பசிபிக் இடையிலான உறவு என்பது அமைதியை மையப்படுத்தி இருக்க வேண்டும், ஆயுத விற்பனையை மையப்படுத்தி இருக்க கூடாது என்று சீனா இந்தியா - அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆசியா - பசிபிக் இடையிலான உறவு மூலம் கேம் ஆடக்கூடாது. இதை அடிப்படையாக வைத்து ஸ்பெஷல் குரூப்களை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதெல்லாம் சர்வதேச பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் உதவாது. ஆசியா - பசிபிக் இடையிலான உறவை பிரச்சனையை உருவாக்குவதற்கான மையமாக பயன்படுத்த கூடாது என்று சீனா இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய போர் விமானப்படையில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இணையும். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்டெல்த் போர் விமானங்கள் ரகசியமாக சென்று தாக்குதல் நடத்த முடியும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா, பாகிஸ்தானை இந்த சந்திப்பு கதி கலங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+