Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் என்ன இப்படி சொல்லிட்டாரு.. திகைப்பில் திமுக, அதிமுக, பாஜக.. கிரேட் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அறிவித்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்..

நடிகர் தளபதி விஜய் படத்தில் தொடங்கி அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்பது தெரியவந்தது. பிகில் மேடையில் நேரடியாக அதிமுகவை தாக்கும் வகையில் பேசினார்.

Why did Vijay announce that Tamil Nadu Vetri Kazhagam will not contest in 2024 elections?

அதன்பிறகு ஒவ்வொரு மேடையிலும் விஜய் அரசியல் பேசுவது அதிகரித்தது.. விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பதை 2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல் உறுதி செய்தது. தமிழ்நாட்டில் அப்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.

குறிப்பாக சொல்வது என்றால், புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றி பெற்றார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். இப்படி நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்று இருந்தது விஜய் மக்கள் இயக்கம். எந்த பிரச்சாரமும் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றியால் விஜய் உற்சாகமானார்.


அதன்பின்னர் அரசியல் கட்சியாக தனது மக்கள் இயக்கத்தை மாற்ற முடிவு செய்த விஜய், அதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம், ஐடி விங் நிர்வாகிகள் நியமனம், வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என ஒவ்வொரு அணியாக உருவாக்கினார்.. அதன்பின்னர் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து நலதிட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். இறுதியாக தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்திருப்பதற்கு காரணமும் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியில் வேட்பாளர்களை தயார்படுத்துவது, பிரச்சாரம் செய்வது, சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை பொதுமக்களை சந்திப்பது இயலாத காரியம். அதுமட்டுமல்ல.. விஜய் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து கொடுத்தாக வேண்டும். அதன்பிறகே முழுமையாக கட்சிக்குள் வர முடியும். அதுமட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேளை போட்டியிடும் என்றால், யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க கோருவார்கள்.


தனித்து போட்டி என்றால், தமிழக வெற்றி கழகம் எவ்வளவு வெற்றி பெற்றது என்பதையும் மக்கள் கவனிப்பார்கள். 2024 தேர்தலில் பெரும் வாக்குகள் கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், 2024 தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருக்க விஜய் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அதேநேரம் 2024 தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜய் அறிவிக்க காரணம், எந்த அரசியல் கட்சி சார்பும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஜய் நம்புகிறார். 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்பதால், அதில் தான் கவனம் செலுத்துவார். அப்போதும் தனித்தே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் விஜய் ஏற்படுத்த போகும் தாக்கம் தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+