விஜய் இப்படி பண்ணாலாமா'.. எடப்பாடி பழனிசாமி வணக்கம் வைத்த போது.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் பதவியேற்கும் நிகழ்வின் போது, முதல்வர் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்தார். ஆனால் விஜய் வணக்கம் வைக்காமல் எந்த சலனும் இன்றி இருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் இருந்த பேப்பர் தவறி கீழே விழுந்தது. அதனை குனிந்து எடப்பாடி பழனிசாமி எடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. இதனை பார்த்த அதிமுகவினர் வணக்கம் வைத்தால் பதில் வணக்கம் வைக்க வேண்டியது அரசிய மாண்பு என்று முதல்வர் விஜய்யை கண்டித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. நேற்று முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவும் நேற்று பதவியேற்றார். இன்று காலை 17-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது.

Vijay

தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இன்று வரிசையாக பதவியேற்றனர். முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்தார். இதனால் 233 பேர் இன்று பதவியேற்றனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சிலர் மட்டும் சான்றிதழ் இல்லாத காரணத்தால் பதவியேற்கவில்லை. அவர்கள் நாளை அல்லது மாலையில் பதவியேற்க வாய்பபு உள்ளது..

சட்டமன்றத்தில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை அல்லது நாளை மறுநாள் சட்டசபையில் விஜய் தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் பதவியேற்கும் நிகழ்வின் போது, முதல்வர் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்தார்.ஆனால் விஜய் வணக்கம் வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் இருந்த பேப்பர் தவறி கீழே விழுந்தது. அதனை குனிந்து எடப்பாடி பழனிசாமி எடுத்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. இதை பார்த்த அதிமுகவினர், விஜய் செய்தது தவறு.. வணக்கம் வைத்திருக்க வேண்டும். அதுதான் அரசியல் மாண்பு என்று கூறி விமர்சித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தொடர்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக இருப்பதற்கு அதிமுக எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டும் ஆதரவு கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் தந்ததாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க போகும் நாளில் தமிழ்நாடே எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். அதிமுகவினர் கணிசமானோர் விஜய்க்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+