ஸ்கெட்ச் உசிலம்பட்டிக்குதானே? மதுரைக்கு ஏன் போனாரு விஜய்.. எடப்பாடி பழனிசாமி என்ன கேட்டார் தெரியுமா
சென்னை: "தாராபுரம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே அதிருப்தி கிளம்பி உள்ளது.. தண்ணீரின்றி மக்கள் படும் அவஸ்தைகள், தொடரும் மின்வெட்டு, வேலைவாய்ப்பின்மை மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்து தாராபுரம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. இதற்குகூட பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்களும் வேட்பாளர்களும் திணறுகிறார்கள்.. இது தொடர்பான கேள்விகளையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் பொதுமக்களின் மீதும், ஊடகத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்தும் அச்சுறுத்துகிறார்கள்" என்று ஆளும் தரப்பை விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்.
தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்" என்ற பெயரில் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு, "யார் பெற்ற மகனோ" என்ற பாடலை ஒலிக்கவிட்டு சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்வதற்காகவே சில நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது..

யார் பெற்ற மகனோ ரீல்ஸ்
மதுரையிலும் தேனியிலும் சீர்செய்வது கிராமத்து வழக்கம் என்றாலும், இதைப் பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு விளம்பரத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள், மதுரை அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளுக்காகப் பிரம்மாண்டமான விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேற மாற்றம் எதுவுமே இல்லை.. இந்த 5 மாதத்தில் எதுவுமே முன்னேற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், பின்னோக்கி போகக்கூடாது.
சென்னையில் முன்னணி ஐடி நிறுவனங்களின் தலைவர்களும் சிஇஓக்களும் முகாமிட்டிருந்தனர்.. ஆனால், அமைச்சர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.. தொழில்முனைவோர்களை சந்தித்துப் பேசி முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அமைச்சர்களோ அதிகாரிகளோ உரிய நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை.
லண்டன் பயணம் மற்றும் முதலீடுகள் குறித்துப் பேசப்பட்டாலும், உள்ளூர் அளவில் தொழில் துறையைக் கையாள்வதில் அரசின் கவனம் திசைமாறி நிற்கிறது.. காரணம், மொத்த பேரும் இடைத்தேர்தல் பணியில் உள்ளனர்..
தாராபுரம் கேமரா
தாராபுரத்தில் கேமராவை வெளியே எடுக்கக்கூடாது என்கிறார்கள்.. அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்டாலோ, கருத்து கணிப்பு நடத்தினாலோ உடனே தவெகவினர் வந்து தடுக்கிறார்கள்..
தாராபுரம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே அதிருப்தி கிளம்பி உள்ளது.. தண்ணீரின்றி மக்கள் படும் அவஸ்தைகள், தொடரும் மின்வெட்டு, வேலைவாய்ப்பின்மை மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்து தாராபுரம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குகூட பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்களும் வேட்பாளர்களும் திணறுகிறார்கள்.. இது தொடர்பான கேள்விகளையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் பொதுமக்களின் மீதும் ஊடகத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து அச்சுறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
தாராபுரத்தில் வீடியோ எடுக்கக்கூடாதாம்.. பயப்படுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? இவ்வளவு பயம் எதுக்கு, அவ்வளவு பயம் என்றால், மக்களுக்கு நல்லதுசெய்ய வேண்டியதுதானே? தேர்தல் அறிவிக்கும் முன்பே 2500 பணத்தை தந்திருக்கலாமே?
கரூர் போலீஸ்
முந்தைய அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தை விட இப்போதைய நிர்வாக நிலைமை படுமோசமாகி விடட்து.. பத்திரப் பதிவுத் துறையில் ஆன்லைன் பதிவுகள் நிராகரிக்கப்படுவதால் மக்கள் மீண்டும் பழைய முறையிலேயே அலைக்கழிக்கப்படுகிறார்கள்.. புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
பொதுமக்களை கேள்வி கேட்கவிடாமல் தடுக்கவும், பாதுகாப்புப் பணிகளுக்காகவும் காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள்.. மதுராந்தகம் போனாலும் கூடவே போலீஸ் போகிறது.. தாராபுரம் போனாலும் கூடவே போலீஸ் போகிறது.. ஆனால், கரூர் சம்பவத்தின்போது இதே போலீஸை ஏன் குறை சொன்னீர்கள்? நேற்று கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்தார்களே? அவர்களை காப்பாற்றியதும் இதே போலீஸ்தான்..
அன்றும் காவல்துறை அன்றும் தவறு இல்லை, இன்று மதுரையிலும் தவறு செய்யவில்லை.. தவறு மொத்தமும் விஜய் சாரிடம் உள்ளது.. காவல்துறையும் மனிதர்கள்தான்.. வெயிலில் யூனிபார்முடன் எவ்வளவு நேரம்தான் டியூட்டி பார்ப்பார்கள்?
உசிலம்பட்டி, மதுரை ஸ்கெட்ச்
எடப்பாடி பழனிசாமி விஜய் தரப்பினரை நோக்கி எழுப்பிய கடுமையான கேள்விகளை கேட்கிறார்.."உங்கள் அண்ணன், உங்கள் விஜய், உங்கள் பிள்ளை என்று எல்லாரும் சொல்கிறீர்கள், ஆனால் அவர் தன் சொந்தக் குடும்பத்துடனும் பெற்ற பிள்ளை மற்றும் மனைவியுடனும் வீட்டில் தங்குவதில்லை, அவர்களுடன் இருக்கிறாரா? பெற்றோருடன் இருக்கிறாரா? பாசம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?" என்று எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷமாகவும் பச்சையாகவும் கேள்வி எழுப்புகிறார்..
மதுரைக்கு ஏன் விஜய் போகணும்? உசிலம்பட்டிக்கு செல்வதாகத்தானே முதலில் ஸ்கெட்ச் இருந்தது? ஏனென்றால், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டிக்கு செல்வதானால், மதுரையிலிருந்து ஒன்றரை மணி நேரம், 2 மணி நேரமாகும்.. வெற்றி பெற வைத்த மக்களுக்காக 2 மணி நேரம்கூட ஒதுக்கவில்லை.
மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் போன்ற விமான நிலையங்கள் உள்ள பகுதிகளை மையமாக வைத்தே பயணத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.. ஏர்போர்ட் இல்லாத கிராமப் பகுதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்பதில்லை" என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
