12 சீட்டுதான்.. விஜயிடம் சொன்ன எடப்பாடி.. சீமானை பார்த்த விஜய்? ரவீந்திரன் துரைசாமி சொன்ன சீக்ரெட்
சென்னை: சீமானும் - விஜயும் சந்தித்து பேசினார்கள். நான் அந்த கூட்டணி செல்லாது என்று கூறினேன். விஜய்க்கு நாம் தமிழர் 30 இடங்கள் தர நினைத்தது. வேண்டாம் என்று நான்தான் நாம் தமிழரிடம் சொன்னேன். விஜய்க்கு 45 இடங்கள் தர சீமான், எடப்பாடி என்று யாரும் தயாராக இல்லை . விஜய்க்கு 12 இடங்கள் கொடுக்க மட்டுமே எடப்பாடி தயாராக இருக்கிறார். வேறு யாரும் விஜய்க்கு சீட் தர தயாராக இல்லை, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேச்சு
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் எடப்பாடி போட்டியிடாமல் போனது சீமான் மீது அவருக்கு உள்ள அச்சம்தான். . சீமான் பெரிய ஆள் ஆகிவிட்டார். அவரை அதிமுக ஏற்றுக்கொள்ளுமோ கொள்ளாதோ.. டெல்லி அவரை கருத்தில் கொள்ளலாம். மோடி அவரை டிக் அடிக்கலாம். சீமான் தன்னை பலமான ஆள் என்று நிரூபித்துவிட்டார். சீமானுக்கு பலம் இருக்கிறது.
சீமானின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து உயருகிறது. எடப்பாடிக்கு கூடும் கூட்டம் காசுக்கு வரும் கூட்டம். எடப்பாடிக்கு வரும் கூட்டம் பாதியில் செல்கிறது. ஆனால் சீமானுக்கு வரும் கூட்டம் அப்படி இல்லை. அவர்கள் இருந்து சீமான் பேசுவதை முழுமையாக கேட்கிறார்கள். அதிமுக மாஸ் பார்ட்டி. அங்கே எடப்பாடி மட்டுமல்ல. எடப்பாடி மட்டும் அதிமுக கிடையாது.
சீமானுக்கு 8 சதவிகிதம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. அவருக்கு பல சாதி சப்போர்ட் உள்ளது. சீமான் வந்தால்தான் நம்ம ஜாதிக்கு பலம் வரும் என்று நினைக்கிறார்கள். இதற்காக எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் நோக்கி போவார் என்று சொல்ல முடியாது. தமிழக வெற்றிக் கழகம் பலமற்ற கட்சி. ஏட்டு சுரைக்காய். இப்படி எல்லாம் கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி செட்டாகாது.
தமிழக வெற்றிக் கழகம் பலம் என்ன? தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது? இவர்களுடன் கூட்டணி வைத்தால் அதிமுக எப்படி வெல்லும்? ஆதவ் அர்ஜுனா சொல்கிறார்.. 45 சீட் கேட்போம் என்று. தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 30 சீட்டுகள் கொடுக்கவே நாம் தமிழர் தயாராக இல்லை. யார் 40 + கொடுப்பார்கள். நாம் தமிழர் 30 இடங்கள் தர நினைத்தது. வேண்டாம் என்று நான்தான் நாம் தமிழரிடம் சொன்னேன்.
சீமானும் - விஜயும் சந்தித்து பேசினார்கள். நான் அந்த கூட்டணி செல்லாது என்று கூறினேன். விஜய்க்கு நாம் தமிழர் 30 இடங்கள் தர நினைத்தது. வேண்டாம் என்று நான்தான் நாம் தமிழரிடம் சொன்னேன். விஜய்க்கு 45 இடங்கள் தர சீமான், எடப்பாடி என்று யாரும் தயாராக இல்லை . விஜய்க்கு 12 இடங்கள் கொடுக்க மட்டுமே எடப்பாடி தயாராக இருக்கிறார். வேறு யாரும் விஜய்க்கு சீட் தர தயாராக இல்லை,












Click it and Unblock the Notifications