மீண்டும் சேர்ந்தது ஏன்? விவாகரத்துக்குப் பின் நடந்தது என்ன? பிரியா ராமன் ஓபன் டாக்
சென்னை: விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி இணைந்து வாழ ஆரம்பித்தோம் என்பது பற்றி நடிகை பிரியா ராமன் சில விசயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் 'வள்ளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ராமன். நடிகர் ரஞ்சித்துடன் 'நேசம் புதுசு' படத்தின் இணைந்து நடித்த பிறகு இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே தான் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு விவாகரத்து நடைபெற்றது. அடுத்து ராகசுதாவை இரண்டாவது திருமணம் செய்தார் ரஞ்சித். அந்தக் குடும்ப உறவில் மீண்டும் விரிசல் விழவே, மறுபடியும் பிரியா ராமனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.
அடிப்படையில் கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ஆனால், இவரது முதல் மனைவி பிரியா ராமன் கேரளாவைச் சேர்ந்தவர். பல படங்களிலும் டிவி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கவுண்டன் பாளையம்' படம் தொடர்பாகப் பேசிய போது ஆவணக் கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை அவர் கூறியிருந்தார். அதனால் பல எதிர்ப்புகள் எழுந்தன. அந்தப் புகழ் வெளிச்சத்தில் இப்போது விஜய் சேதுபதி, தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி பிரியா ராமன், தங்கள் குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலுக்குப் பின் இணைந்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். தன் கணவருக்கு நல்ல வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது என்றும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "அவர் படத்தைப் பார்த்தவர்கள் யாரும் அவரை விமர்சிக்கவில்லை. அவர் பேசிய கருத்தை வைத்து சிலர் மாற்றி அமைத்து விமர்சித்தனர். அதற்கு என் கணவர் ஒரு விளக்கமும் கொடுத்தார். 'பயிர் ஒன்று போட்டோம். செடி வேறாக முளைத்துவிட்டது. இருந்தாலும் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது தப்புதான். அதை மறந்து பொதுவான மனிதராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்' என்று விவசாயி பாணிப் பதில் சொன்னார். அனைவருக்குமே தவறு செய்வதற்காக வாய்ப்பு வாழ்க்கையில் எப்போதும் இருக்கவே செய்கிறது. பலரும் ஒருமுறையாவது வாழ்க்கையில் கீழே விழுந்துதான் எழுவார்கள். தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க முடியாது.
மேடு பள்ளங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும். யாருமே தன் வாழ்க்கையில் கஷ்டத்தைப் பார்க்கவே இல்லை என்று சொல்ல முடியாது. எப்படி கீழே விழுகிறோமோ அதைப்போல் மேலே எழுவதற்காகச் சக்தியைக் கடவுள் தருவார். நம் மனம் எதையுமே செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும்போது ஒருவர் உதவிக்குக் கட்டாயம் வருவார். அல்லது நமக்குள் இருக்கும் கடவுள் நம்பிக்கை நம்மை கை தூக்கிவிடும்.

எனக்கும் அப்படி நடந்துள்ளது. பலருக்கும் அது நடந்திருக்கும். என்னை விட என் கணவர் தைரியசாலி. அவரது ஒரே வீக் பாயிண்ட் நானும் என் பிள்ளைகளும்தான். எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். குடும்பத்தின் மீது ரஞ்சித்துக்குப் பிடிப்பு அதிகம். வேறு எந்த விசயத்திற்கும் அவர் கலங்கமாட்டார். அவர் வெளியில் எப்படி இருக்கிறாரோ அதேபோல்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார். அவர் வீட்டில் எப்படி வட்டார வழக்கில் பேசுவாரோ அதேபோல் தான் பேசுகிறார். அதைச் சிலர் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அதுதான் அவரது உண்மை முகம்.
நாங்கள் பிரியலாம் என நினைத்து முடிவு எடுத்த பிறகும் அவர் தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லிக் கேட்டார். மறுபடியும் நாங்கள் வாழத் தொடங்கினோம். அவர் மிக வெளிப்படையானவர். அவரைப் புரிந்து கொண்டு குழந்தைகளுக்காக மீண்டும் இணைந்தோம்.












Click it and Unblock the Notifications