நடிப்புக்கு முழுக்குப் போட்டது ஏன்? தேசிய விருது பெற்ற இவரை நினைவு இருக்கிறதா?
சென்னை: குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துவந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி திடீரென்று நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அளவில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு, அந்தப் பட்டியலில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குக் கடந்த வாரம் 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இயக்குநர் மணிரத்னத்திற்கு விருது கிடைத்த ஆச்சரியத்தைவிட ஒலிப்பதிவுக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு விருது கிடைத்துள்ளது. இந்தத் துறை சார்ந்த விருதுகள் கிடைப்பது தமிழில் அபூர்வம். ஏனெனில் சினிமா துறைக்குள் இருப்பவர்களே இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத துறையாக இது இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் அஞ்சலியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அதனைத் தொடர்ந்து சதி லீலாவதியில் நடித்தார். அதற்கு அப்புறம் திரையில் நடிகராக இவர் தொடவே இல்லை. திடீரென்று கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்' சவுண்ட் இஞ்ஜினியராக அறிமுகமானார். இப்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் மூலம் தேசிய விருதைத் தட்டிக் கொண்டு வந்துள்ளார்.
சவுண்ட் எஃபெக்ட் தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக இந்த தேசிய விருதை இவர் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் நடிகராக அறிமுகமான இவர், அதற்குப் பின்பு வேறு படங்களில் நடிக்கவே இல்லை. என்ன ஆனார்? எங்கே போனார்? இந்தத் திடீர் அவதாரம் எப்படி நடந்தது?
இது குறித்து ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சினிமாவில் நடிப்பதை ஏன் தொடரவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். ஆனந்த் பேசுகையில், "பத்தாம் வகுப்புக்கு அப்புறம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டேன். அதன்பிறகு படிப்பு மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். எனக்கு நடிப்பு என்பது இரண்டாம் பட்சம்தான். அதில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்துப் படித்தேன். அதில் போட்டோகிராஃபி படித்தேன். அடுத்து பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். மீண்டும் சவுண்ட் இஞ்ஜினியரிங் கிண்டியில் படித்தேன். மேலும் ஆழ்ந்து கற்பதற்காக லண்டன் போய் படித்தேன்.

அதை முடித்ததும் கமல்ஹாசனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் மர்மயோகி டிஜிட்டலில் எடுக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஃபிலிம் மூலம்தான் எடுப்பது வழக்கம். ஆனால், மாற்றி அட்வான்ஸ் லெவலில் டிஜிட்டலில் எடுக்க திட்டமிட்டிருந்தார். அதில் நானும் இணைந்தேன். அவர் 'உன்னைப் போல் ஒருவன்' வாய்ப்பு கொடுத்தார். அது அப்படியே 'பொன்னியின் செல்வன்' வரை கொண்டு வந்துவிட்டது.
இன்று தேசிய விருது பெரும் அளவுக்கு உழைத்திருப்பது மகிழ்ச்சி. ஏனென்றால் ஒலி அமைப்பு பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை. அதைப் பாராட்டி ஆஸ்கரில் விருது தருகிறார்கள். இந்திய சினிமாவில் ஒலி அமைப்புக்கும் விருது இருப்பது பெரிய விசயம்" என்கிறார்.

இந்த சவுண்ட் எஃபெக்ட் என்பது எப்படி சினிமாவில் இயங்குகிறது என்பதைப் பற்றி பேசிய ஆனந்த், "ஒரு திரைப்படத்திற்குச் சத்தம் என்பது மூன்று விதங்களில் தேவைப்படுகிறது. முதலில் பேசக் கூடிய வசனங்கள், அடுத்து இசை, சவுண்ட் எஃபெக்ட். பலருக்கு டயலாக் பற்றியும் இசை பற்றியும் தெரியும். ஆனால், இந்த ஒலி அமைப்பு பற்றி அதிகம் தெரிவதில்லை. ஒரு கடைத் தெரு என்றால் திரையில் படம்பிடித்துக் காட்டிவிடலாம்.
ஆனால், அந்தக் கடைத் தெருவில் என்ன மாதிரியான ஒலி கேட்கும்? எத்தனை விதமான ஒலிகள் இருக்கும் என்பதைக் கள ஆய்வு செய்து பின்னர் நாங்கள் அதைக் கற்பனை கலந்து உருவாக்குவோம். அதுதான் எங்கள் வேலை.
உதாரணமாகப் பொன்னியின் செல்வனில் வாள் சண்டை இருக்கிறது. நமக்கு வாள் தெரியும். ஆனால், அது சண்டை செய்யும் போது எழுப்பும் ஒலி எப்படிக் கேட்கும் எனத் தெரியாது. ஆயிரம் ஆண்டுகள் முன்பாக இருந்த வாளின் சத்தம் நாம் உருவாக்க வேண்டும். அது மக்கள் நம்பும்படி உருவாக்க வேண்டும்.
இது ஒரு சவாலான வேலை. கதைக்கு ஏற்ப தான் ஒலியை அமைப்போம். ஒலி என்பது படம் பார்ப்பவருக்கு ஒத்துப் போக வேண்டும். வேறுபட்டு நிற்கக்கூடாது. அது பார்வையாளரை எரிச்சல் படுத்தும். ஆகவே அடக்கித்தான் நாங்கள் வாசிக்க வேண்டும். அதில் ஸ்கோர் செய்வதுதான் மிகப்பெரிய சவால்" என்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications