மகனை மறந்த விஜய்? திரிஷா கூட கேக் வெட்டி..ஜேசனுக்கு ஒரு போஸ்ட் போடலையே? பத்திக்கிச்சு சோஷியல் மீடியா
சென்னை: தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டானார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அதே நேரத்தில் முதல்வர் விஜய் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் JSJ Media இணைந்து தயாரித்துள்ளன.

நடிகர் விஜய் இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு விஜய் திரைத்துறையில் கால் வைத்த நிலையில் நடிகரின் மகன் என்ற அடையாளத்தோடு நடிகராக அறிமுகமாகாமல் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்ற முடிவை எடுத்த ஜேசன் சஞ்சய் தனது படத்தில் சந்திப் கிஷனை கதாநாயகனாக வைத்து இயக்குகிறார்.
ஜேசன் சஞ்சய்
முதல் படத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சித்து வரும் ஜேசன் சஞ்சய், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் அதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது. அதில், "ஜேசன் சஞ்சய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் பயணம் பல சாதனைகளையும் தொடர்ச்சியான வெற்றிகளையும் பெறட்டும்" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் #HappyBirthdayJasonSanjay என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.
விஜய்
இந்த நிலையில் திடீரென ஜேசன் சஞ்சயின் பிறந்தநாளை வைத்து முதல்வர் விஜய் தொடர்பான விவாதம் எழுந்திருக்கிறது. நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது நடிகை திரிஷாவுடன் நள்ளிரவில் கேக் வெட்டியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. நடிகராக இருக்கும் போதும், தற்போது முதல்வராக இருக்கும்போதும் விஜய், சக திரை கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
ஜேசன் பிறந்தநாள்
இதனால் தனது மகனின் பிறந்த நாளுக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது வரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விஜய் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே என விவகாரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
சங்கீதா
இருதரப்பு மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் சங்கீதாவும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்கவில்லை. தாயுடன் இருக்கும் ஜேசன் சஞ்சய் தந்தையுடன் பேசுவதில்லை என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் தான் மகனின் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
சிக்மா
மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களிலும் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகன்பட வெளியீட்டின் காரணமாக சினிமா படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. தந்தைக்கக மகன் விட்டுக் கொடுத்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தந்தை - மகன்
ஆனால் முதல்வர் விஜய் தனது மகனுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது வெளியிலோ வாழ்த்து தெரிவிக்காது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தற்போது வரை விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தந்தை மகன் இடையேயான உறவு பொதுவெளியில் பகிரப்படும் ஒரு சமூக வலைதள பதிவால் அங்கீகரிக்க முடியாது எனவும், நேரிலோ அல்லது தொலைபேசியில் கூட வாழ்த்து தெரிவித்திருக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
