யுவன் சங்கர் ராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை இசையமைப்பாளர்களின் விவாகரத்தின் பின்னணியில் இருப்பது என்ன?
சென்னை: யுவன் சங்கர் ராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை இசையமைப்பாளர்களின் விவாகரத்துக்கு பின்னால் இருப்பது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் சாயிரா பானு விவாகரத்து செய்து என்ன ஆக போகுது என நினைக்காதீர்கள், பணத்தை தாண்டி அவர்களுக்கும் மனசு இருக்கிறது என்பதை உணருங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'தாய்மாமன்' அப்படின்னு ஒரு படம். அதில் மணிவண்ணன் சத்யராஜிடம் கேட்பார். "நீ ஏன் எம்.எல்.ஏ ஆகணும்னு நினைக்கிறே..?" "நான் படிக்காதவன். அம்மணி படிச்ச பொண்ணு. நான் ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆகிட்டா அம்மணி 'எம்.எல்.ஏ பொண்டாட்டி'ன்னு ஊருக்குள்ள சொல்லிக்கலாம்ல..."

இதுதான் பொதுவாக ஆண்களால் பெண்கள் மீது அதாவது தம் மனைவிகள் மீது வைக்கப்படும் பார்வை. இன்னார் பொண்டாட்டி, இந்த இசையமைப்பாளர் மனைவி அப்படிங்கிறதை எல்லாம் தாண்டி வேறு ஒன்றை இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே நிஜம்.
இளையராஜா என்கிற இசையமைப்பாளர் ஒரே நாளில் மூன்று படங்களுக்கு இசையமைத்ததாக ஒரு பதிவில் இளையராஜாவின் மேதைமை போற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னால் அவரின் கவனிக்கப்படாத குடும்பத்தின் சின்னச் சின்ன அபிலாஷைகள் இருக்கலாம்தான்.

யுவன் தன் இரண்டு மனைவிகளை பிரிந்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பள்ளித் தோழியான மனைவியை பிரிந்தார். இமான் கூட விவாகரத்தை அறிவித்தார். பாடகர் கிஷோர் குமார் மூன்று மனைவிகள் வரை விவாகரத்து செய்திருக்கிறார்.
பொதுவாக செலிபிரைட்டி ஆண்கள் மட்டுமல்ல அரசு வேலை தவிர மற்ற ஆண்கள் அனைவரும் தம் வெற்றிக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. சாமானியனுக்கே இப்படி என்றால் செலிபிரெட்டிகள் நிலைமை?. வெற்றி, வெற்றி என ஓடியாகவேண்டிய நிலை.
இதற்கு மேல் ரஹ்மான் மனைவி விவாகரத்து வாங்கி என்ன செய்யப்போகிறார் என நினைக்கலாம். ஆனால் நெடுங்காலமாக காலை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விட்டு விடுதலையான உணர்வே அலாதியானது. போதுமானது. 'ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி' என்பதை விட, பெயரையும், புகழையும் விட அந்த உணர்வைத்தான் இன்றைய பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
தன் சுயத்தை விரும்பும் விதமாக பெண்கள் மாறிக் கொண்டிருப்பது தான் இன்றைய விவாகரத்துகளின் காரணம். அது சரியா, தவறா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு அவர்களுக்கு சரியானதே.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications