மாறிட்டாங்க! அதிமுகவில் திரும்புற இடமெல்லாம்! எடப்பாடி சொன்ன இந்த ஒரு வார்த்தைதான்.. என்னது திமுகவா?
சென்னை: அண்ணாவை பற்றி தவறான கருத்தை பாஜக அண்ணாமலை சொல்லியதற்கு அதிமுக கடும் கோபம் கொண்டுள்ளது. இது தொடர்பாக கட்சியினர் இடையே எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற பாணியில் அண்ணாமலை பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

அப்போதே அதிமுக - பாஜகவினர் இடையே அது கடுமையான மோதலுக்கு வழி வகுத்தது. இந்த நிலையில்தான் தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கோபம்: அண்ணாவை பற்றி தவறான கருத்தை பாஜக அண்ணாமலை சொல்லியதற்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது அதிமுக. இந்த நிலையில், இது குறித்து திமுக எந்த ஒரு கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்காமல் இப்போது ஆர்.எஸ். பாரதியை வைத்து கண்டித்திருக்கிறார்கள்.
ஆர். எஸ் பாரதி தனது கண்டனத்தில், அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால், அண்ணாமலை ஆடுதான் மேய்த்திருக்க வேண்டும், அண்ணாவால்தான், அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார். அண்ணாமலை தவறான புள்ளி விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அனுமதிக்க மாட்டோம்., என்று ஆர். எஸ் பாரதி கூறி உள்ளார்.
இதனை அதிமுக தலைவர்களிடம் பகிர்ந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, " பெரியாரும் அண்ணாவும் தான் எங்கள் தலைவர்கள் என சொல்லி வரும் திமுக தலைவர் ( ஸ்டாலின் ) , அண்ணாவுக்கு எதிராக பொய்யான கருத்தை அண்ணாமலை சொல்லியும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. திமுகவினர் இப்படி மாறிட்டாங்களே.. ஏன் என்ன ஆச்சு"" என்று சொல்லியிருக்கிறார்.

அண்ணாமலை - அதிமுக இடையே மோதல் உச்சம் எடுத்துள்ள நிலையில் திமுக இப்படி அண்ணாமலையை தாக்காமல் இருந்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் அனைத்து இடங்களிலும் எடப்பாடியின் இந்த கருத்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் விமர்சகர்களும் கூட , 'அதிமுக காட்டமாக பேசியதை அடுத்து தான் 3 நாள் கழித்து திமுக ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையை கண்டித்திருக்கிறார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். அல்லது திமுக தலைமையிடமிருந்து காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் அப்படி எதுவுமே வரவில்லையே. ஏன் இப்படி ' என விவாதித்துக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications