அமைச்சராகிட்டு தான் கரூர் மண்ணில் கால்வைப்பேன்.. சொல்லியடித்த செந்தில் பாலாஜி.. சாத்தியமானது எப்படி?
சென்னை: அரசியல்வாதிகளுக்கு ஏற்ற, இறக்கம் என்பது மிகவும் சாதாரணம். ஆனால் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை நினைத்து அரசியல் புள்ளிகளே ஆச்சர்யப்படுவார்கள். திமுக அமைச்சரவையில் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களே பந்தாடப்படும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன். இது எப்படி சாத்தியமானது.
அமலாக்கத்துறை கடந்தாண்டு செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது. அப்போது பவர்புல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார். அமைச்சர் பதவி பறிபோகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 471 நாட்கள் சிறைவாசம். ஒவ்வொரு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும்போது, அது நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது வாடிக்கையானது.

அதனால் செந்தில் பாலாஜி விடுதலையாவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சட்டம் தெரிந்த வல்லுநர்கள் கூட, அவர் வெளியாவது கடினம் என்று தான் கூறினர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த இரண்டு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சராவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இன்று மதியம், அதாவது சிறையில் இருந்து வெளியில் வந்த மூன்றாவது நாளில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரது அரசியல் அவ்வளவுதான் என்று பலரும் கூறினர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுமே நம்பிக்கை இழந்துதான் காணப்பட்டனர். இது எப்படி சாத்தியமானது, சீனியர் அமைச்சர்களுக்கு இணையாக செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுப்பது ஏன்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசினோம், "செந்தில் பாலாஜி எந்தக் கட்சியில் இருக்கிறாரோ அந்தத் தலைமையின் நம்பிக்கையை பெறுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார். அதிமுகவில் ஜூனியர் அமைச்சராக இருந்தபோதே, செந்தில் பாலாஜியை பார்த்து சீனியர் அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு ஜெயலலிதா, சசிகலாவின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
இதுகுறித்துதான் முன்பு மு.க. ஸ்டாலினும் செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார். செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்தபோதும், ஆர்கேநகர் இடைத்தேர்தல் போன்ற முக்கியமான நேரத்தில் டிடிவி தினகரனுக்கு பக்க பலமாக இருந்தார். 2018ம் ஆண்டு திமுகவில் இணைந்தவுடனே மாவட்ட செயலாளர், அரவக்குறிச்சி எம்எல்ஏ என்று அடுத்தடுத்து பதவிகள் தேடி வந்தன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவரது வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
மின்சாரத் துறை, மதுவிலக்கு என்று பவர்புல்லான துறை செந்தில் பாலாஜி வசம் சென்றது. கோவை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். மற்ற அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கத்தான் செய்கிறது. செந்தில் பாலாஜி தலைமையை எல்லா வகையிலும் திருப்திபடுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமல்லாமல், துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் என்று அனைத்து பவர் சென்டர்களிலும் செந்தில் பாலாஜி ஆழமான நம்பிக்கையை பெற்றார்.
முக்கியமாக கோவையில் பலவீனமாக இருந்த திமுகவை, தனது களப் பணி மூலம் தேர்தலில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஸ்டாலின், உதயநிதியை அழைத்து அடிக்கடி பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவார். இதனால் தலைமை அவரை மலை போல நம்பியது. சிறைக்கு சென்றபோது கூட கோவை, கரூர் மாவட்டங்களில் அவர் முடிவு தான் இறுதியானது. செந்தில் பாலாஜிக்காக அமைச்சரவை மாற்றத்தை காத்திருப்பில் வைத்தது.
கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஆளுமையான செயல்வீரர்கள் குறைவு. அதை நன்கு தெரிந்து கொண்டு செந்தில் பாலாஜி வேலை பார்த்தார். அதற்கான பலனை அனுபவிக்கிறார். செந்தில் பாலாஜி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு வைராக்கியம் அதிகம். சொன்னதை செய்வது வரை ஓய மாட்டார். சிறையில் இருந்து வெளி வந்ததும் பெரிதாக யாரிடமும் மனம் விட்டு பேசவில்லை.
அதிகம் சிரிக்க கூட இல்லை. தனது வீடு, எம்எல்ஏ ஹாஸ்டல் கூட செல்லாமல் ஹோட்டல் அறையில் தான் தங்கியுள்ளார். அதேபோல அவர் சிறையில் இருந்து வெளியானதும் எப்போது கரூர் வருவார் என்று கரூர் திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. சொந்த ஊரில் மீண்டும் அமைச்சராக தான் காலடி எடுத்து வைப்பேன் என்று மனதுக்குள் சபதம் எடுத்தார். அதன்படி இன்று அமைச்சராக பதவியேற்றுவிட்டு, வருகிற செவ்வாய்கிழமை கரூர் செல்ல திட்டமிட்டுள்ளர்." என்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications