ராஜ்யசபா சீட்டுக்கு பதில்- சிறுபான்மை ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ்- செம கூல் செய்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுகவிடம் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா சீட் கேட்டு வந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸுக்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி கொடுத்து கூல் செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 இடங்களுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுகவுக்கு 2; அதிமுகவுக்கு 1 எம்.பி. பதவி கிடைக்கும்.
இதனால் திமுகவிடம் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. காங்கிரஸ் கட்சியில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பெயர்கள் ராஜ்யசபா ரேஸில் முதலில் அடிபட்டன.

டெல்லி சந்திப்பு
அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்திக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது.

குலாம்நபி லாபி
இது தொடர்பாக கட்சியினருடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத்தும் தமக்கான லாபிகள் மூலமாக திமுக தலைமையிடம் ராஜ்யசபா சீட் கேட்டுக் கொண்டிருந்தார்.

பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி
இந்த நிலையில்தான் தற்போது ராஜ்யசபா சீட் ரேஸில் இருந்த பீட்டர் அல்போன்ஸுக்கு சிறுபான்மையினர் நல ஆணையர் பதவியை அளித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுக்கிறோம்; அதனால் ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாமே என்ற தகவலை காங்கிரஸ் மேலிடத்துக்கு சொல்லி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆதரவு காங். தலைவர்
பீட்டர் அல்போன்ஸைப் பொறுத்தவரையில் திமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவே அறியப்பட்டவர். திமுக ஆட்சிக் காலத்தில் அவருக்கு பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அனைவரது எதிர்பார்ப்பின்படியே சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.

கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணி கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணையங்கள், வாரியங்களின் தலைவர்கள் பதவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையை பீட்டர் அல்போன்ஸ் நியமனம் மூலம் திமுக அரசு உருவாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications