மோப்பம் பிடித்த டீம்.. ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்.. கூடும் பட்ஜெட்.. 18ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடக்க உள்ளது
சென்னை: திமுக எம்எல்ஏக்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், எதற்காக இந்த திடீர் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் வருகிற 18ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது...
மறுநாள் 19ஆம் தேதி வேளாண் துறை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

சபாநாயகர்
பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது..இதில் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.. தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்... சுமார் 25 நாட்கள் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற 18ம் தேதி மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
பட்ஜெட் துவங்கும் முன்பு, அக்கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை எவ்வாறு சட்டப்பேரவையில் பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கு உள்ளதாக தெரிகிறது.. அதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்படும் என்றாலும், வேறு சில எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

அறிவுரைகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் தன்னுடைய எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளார்.. ஏற்கனவே இப்படித்தான் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தபோது, சில அறிவுரைகளை அவர்களுக்கு தந்திருந்தார்.. "நிறைய விஷயங்களை கேள்விப்படுகிறேன்.. மாவட்ட ரீதியாக ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது.. சில மா.செ.க்களின் செயல்பாடுகள் குறித்த புகார்களும் வருகின்றன.. இனி தொடர்ந்து இப்படி நடந்தால், கட்சி தலைமை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று எச்சரித்திருந்தார்.

அறிவுறுத்தல்
அத்துடன், மக்களுடன் நெருங்கி, மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து தொகுதிகளில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.. இப்போது நகர்ப்புற தேர்தல் ரிசல்ட்கள் வந்த நிலையில், மாவட்டங்களில் நடந்த சில விவகாரங்கள் குறித்தும், முதல்வருக்கு ரிப்போர்ட் போனதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், இது தொடர்பாக ஏதாவது முதல்வர், திமுக எம்எல்ஏக்களிடம் பேசக்கூடும் அல்லது விசாரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக
மேலும், சமீபகாலமாகவே அதிமுக, பாஜக இரு தரப்புமே, திமுக மீதான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் கேள்விகளை எதிர்தரப்பு எழுப்பி வருகின்றனர்.. எனவே திமுக அரசு மீது மற்றும் துறைவாரியான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதற்கு முழு தரவுகளோடு புள்ளிவிவரங்களை தர வேண்டும், அவர்களின் விமர்சனங்களுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் முதல்வர் வழங்கலாம் என்று தெரிகிறது.

அரசியல் நாகரீகம்
நடக்க போகும் பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழக மக்களுக்கு எத்தகைய வகையில் நன்மைகளை பயக்க போகிறது என்ற பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், கடந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உரிய மதிப்பு தந்து, அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தியதைபோல், இந்த முறையும் எதிர்பார்க்கலாம் என்றே நம்பப்படுகிறது..
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications