ஸ்டாலினை நள்ளிரவில் வரவேற்ற துரைமுருகன்.. திடீர்னு வந்த புதுசிக்கல்.. என்னனு பாருங்க..!
சென்னை: இப்போதுதான் முதல்வர் ஸ்டாலின் துபாயில் இருந்து திரும்பி உள்ள நிலையில், துரைமுருகன் துபாய் கிளம்ப போகிறார்.. ஆனால் அதற்குள் ஒரு சிக்கல் அவருக்கு வந்துவிட்டது..!
அரசுமுறை பயணமாக துபாய்க்கு சென்று விட்டு இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்...
சென்னைக்கு நள்ளிரவிலேயே ஏர்போர்ட்டில் வந்திறங்கிய முதல்வரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்...

நள்ளிரவு
ஏர்போர்ட்டில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டதும் அமைச்சர்களும் தங்களது வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர். வீட்டிற்கு சென்ற துரைமுருகன் மறுபடியும் இன்று காலையில் ஏர்போர்ட்டிற்கு வந்தார்... தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல வந்திருந்தார். எமிரேட்ஸ் ஏர்வேஸில் அவருக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது... வருகிற 2-ம்தேதி டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவும் உள்ளது..

துபாய் பயணம்
இதனால், துபாய் சென்று விட்டு, அங்கிருந்தபடியே ஏப்ரல் 2-ந்தேதி டெல்லிக்கு செல்லவும் துரைமுருகன் தரப்பில் முடிவு செய்திருந்தனர்... இதற்காக இன்று காலை ஏர்போர்ட் வந்திருந்தார் துரைமுருகன்.. அப்போது அவரிடம் வழக்கம்போல் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர்.. பின்னர் அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பாஸ்போர்ட்
பிறகு, "துபாய் செல்ல உங்களை அனுமதிக்க முடியாது" என்று அதிகாரிகள் சொல்லவும், துரைமுருகன் அதிர்ச்சியடைந்து காரணம் கேட்டார்.. அதற்கு அதிகாரிகள், பாஸ்போர்ட்டில் விசா எண் தவறாக உள்ளதால், விமான பயணத்துக்கு அனுமதிக்க முடியாது என்றனர்.. இதனால் திகைத்து போன துரைமுருகன் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.

உதவியாளர்கள்
வீடு திரும்பிய நிலையிலும் டென்ஷனிலேயே துரைமுருகன் இருந்ததாக தெரிகிறது.. உதவியாளர்களிடம் கோபப்பட்டுள்ளார்.. இதையெல்லாம் முன்கூட்டியே கவனிக்க மாட்டீர்களா? உடனே சரி செய்யுங்கள் என்று சொல்லி உள்ளார்.. இதையடுத்து, பாஸ்போர்ட்டில் விசா நம்பர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை திருத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.. இன்று மாலைக்குள் செய்துவிட்டால் துரைமுருகன் துபாய் செல்வார் என்று திமுக தரப்பில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications