இந்த கேள்வி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. ஜீன்ஸ் பேண்டில் சின்ன பாக்கெட் எதுக்கு? இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீன்ஸ் பேண்டில் எதற்காக மிகச் சிறிய பாக்கெட் வைக்கப்படுகிறது என்பது தான் தற்போது கூகுளில் அதிகம் தேடப்படும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு பின்னர் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. நீண்ட தேடலுக்கு பிறகு அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.

நேசமணிக்கு என்ன ஆச்சு? என்பது போல தற்போதைக்கு கூகுளில் திடீரென ஒரு கேள்வி ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது ஜீன்ஸ் பேண்டில் சிறிய பாக்கெட் எதற்கு என்பது தான். இந்த கேள்விக்கு விடை கிடைப்பதற்கு முன் ஜீன்ஸ் பேண்டின் வரலாற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

தற்போதைக்கு ஜீன்ஸ் பேண்ட் இல்லாதவர்களை பார்க்க முடியாது. அனைவரிடமும் நிச்சயம் ஒரு ஜீன்ஸ் பேண்ட் ஆவது இருக்கும். தற்போது பேஷன் உலகில் விதவிதமான ஜீன்ஸ் பேண்ட் வந்து விட்டது. ஆனால் உண்மையில் அது பேஷனுக்காக தயாரிக்கப்பட்டது கிடையாது.

Jeans History google

கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் ஜீன்ஸ். குறிப்பாக சுரங்க தொழிலாளர்கள் மிகக் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அவர்களது உடலை பாதுகாக்கும் வகையில் தடிமனான உடை தேவைப்பட்டது. உடையும் வலுவாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் எளிதில் கிழியவும் கூடாது என்பதால் சுரங்க தொழிலாளர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய தொடங்கினர்.

அதே நேரத்தில் அவர்களுக்கு வாட்ச் தேவைப்பட்டது. சுரங்கங்களுக்குள் நேரம் போவது தெரியாது. சூரிய ஒளியை பார்க்க முடியாது என்பதற்காக அவர்கள் வாட்ச் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் மணிக்கட்டில் வாட்ச் கட்ட முடியாது என்பதால் பாக்கெட் வாட்ச் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஒரு மிகச் சிறிய வாட்ச் சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கும். நிறைய படங்களில் நீங்கள் அந்த வாட்ச்சை பார்த்திருக்கலாம். சரி இதற்கும் ஜீன்ஸ் பேண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? உண்மையிலேயே இது தான் காரணம்.

இப்போது அந்த சிறிய பாக்கெட் ஒரு ஃபேஷன் அம்சமாகவோ அல்லது ஸ்டைல் எனவோ பார்க்கப்படுகிறது. சிலர் அதில் சாவிகள், காயின்கள் மற்றும் சிறிய சிறிய பொருட்களை வைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் ஜீன்ஸ் பேண்டில் சிறிய பக்கெட் இடம்பெற்றது அந்த பாக்கெட் வாட்ச்-ஐ வைத்துக் கொள்வதற்காக தான். 19 ஆம் நூற்றாண்டில் ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது கைக்கடிகாரங்கள் புழக்கத்தில் இல்லை. பாக்கெட் வாட்ச்கள் தான் இருந்தது.

Jeans History google

மிகச் சிறிய கடிகாரங்கள் வைப்பதற்கு அந்த பாக்கெட்டுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக வேலை செய்யும் போது கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மிகச் சிறிய அளவில் அந்த பாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் பெல்ட் லாக் பகுதியில் சங்கிலியை கட்டி விட்டு அந்த சின்ன பாக்கெட்டில் வாட்சை வைத்துக் கொள்வார்கள். காலப்போக்கில் அனைவருமே இதை யாரும் கவனிக்காமல் அப்படியே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். அது இன்று வரை தொடர்கிறது. உண்மையில் பாக்கெட் வாட்ச் வைப்பதற்காகத் தான் ஜீன்ஸ் பேண்டில் சிறிய பாக்கெட் வைக்கப்பட்டது தற்போது அது பேஷனாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+