சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சியிலிருந்தே நீக்குவோம்! ஸ்டாலின் மீட்டிங்கால்.. ஓபிஎஸ் மகனுக்கு "செக்".. மாஜி கசியவிட்ட சீக்ரெட்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் எம்பி ஓ பி ரவீந்திரநாத் நடத்திய மீட்டிங் ஒன்று அவருக்கே வினையாக முடிந்துள்ளது. அதிமுக சீனியர்கள் பலர் ஓபிஎஸ் மகன் மீது அதிருப்தியில் இருப்பதாக ராயப்பேட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் நேற்றுதான் தலைமை கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஓபிஎஸ்ஸை நீக்குவது என்றால் அந்த முடிவு பொதுக்குழுவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஓபிஎஸ்ஸோடு சேர்த்து அவரின் ஆதரவாளர்கள், அவரின் மகன் ஓபிஆர் ஆகியோர் மீதும் ஆக்சன் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன? அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன?

அதிருப்தி

அதிருப்தி

முக்கியமாக அதிமுக சீனியர்கள் பலர் ஓபிஎஸ் மகன் மீது அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் மகனும் எம்பியுமான ஓ பி ரவீந்திரநாத் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தேனி மாவட்ட முன்னேற்றம் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் பேசுவதற்காக முதல்வரை சந்தித்தாக அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதாவது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஆளும் தரப்பு களமிறங்க வேண்டும் என்று ஓபிஆர் கோரிக்கை வைத்ததாக செய்திகள் பரவின.

ஓபிஆர் மீட்டிங்

ஓபிஆர் மீட்டிங்

அதன்பின் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஆர் கூட.. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் முடிவு எடுத்தால் மட்டும் போதாது. பொதுக்குழு நடக்க வேண்டுமா, வேண்டாமா என்று அரசும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதாவது பொதுக்குழுவிற்கு அரசு தடை செய்ய வேண்டும். பொதுக்குழுவை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க கூடாது என்று ஓபிஆர் சூசகமாக சொல்வது கூறப்பட்டது.

 நெருப்பு

நெருப்பு

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை ஓபிஆர் சந்தித்தது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு இருக்கிறது. ஓபிஆர் போய் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருக்க கூடாது. அவர் எப்படி முதல்வரை சந்திக்கலாம். அவர் எம்பி தானே.. தொகுதி முன்னேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களை சந்திக்கலாம். ஏன் மாநில முதல்வரை சந்திக்கிறார் என்று அதிமுகவில் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் கொந்தளித்ததாக கூறப்பட்டது.

வளர்மதி சீக்ரெட்

வளர்மதி சீக்ரெட்

இந்த நிலையில்தான் ஓபிஆரை கட்சியிலிருந்தே நீக்குவோம் என்று முன்னாள் அமைச்சரும், எடப்பாடியின் ஆதரவாளருமான வளர்மதி எச்சரித்துள்ளார். ஓ பி ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது.. ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகளையும் பாதிக்கும் விஷயம். ஓபிஎஸ் மகன் தேனியில் இருந்து வென்றார். அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றார். அப்படி இருக்கும் போது முதல்வரை எப்படி அவர் பார்க்கலாம்.

நீக்கமா?

நீக்கமா?

அவரின் செயல் எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. திமுகவில் யாரை பார்த்தாலும் அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்குவதே வழக்கம். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவோம். அவர் இதற்கு கொடுக்கும் விளக்கம் சரியானது அல்ல. எடப்பாடி இருந்த போது ஓபிஆர் இப்படி ஒருமுறை கூட முதல்வரை சென்று சந்திக்கவில்லை. அப்போதெல்லாம் தொகுதி நலன் கண்ணுக்கு தெரியவில்லையா? என்று வளர்மதி கேட்டு இருக்கிறார்.

Recommended Video

    அதிமுகவிற்கு நாங்கள் துணை நிற்போம்.. இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி
    ஆக்சன்?

    ஆக்சன்?

    முன்பெல்லாம் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அதிமுக நிர்வாகிகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்தால் உடனே அவர்கள் மீது ஜெயலலிதா ஆக்சன் எடுப்பார்.. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆனால்.. ஓபிஆர் மீதும் ஆக்சன் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வளர்மதியின் இந்த பேட்டி காரணமாக ஓபிஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

    English summary
    Why do O P Raveendranath meet CM Stalin? Ex-Minister of AIADMK raises questions. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் எம்பி ஓ பி ரவீந்திரநாத் நடத்திய மீட்டிங் ஒன்று அவருக்கே வினையாக முடிந்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X