தீபாவளிக்கு முன்னாடி தங்கம் வாங்க போறீங்களா? யோசிங்க.. வேற ஒரு நல்ல சான்ஸ் இருக்கு.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நெருங்குவதால் மக்கள் பலரும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில்.. அதற்கு முன்பாக மக்கள் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.

gold rate silver investment

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யோசிங்க: இதனால் தீபாவளிக்கு முன்பாக தங்கம் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காலம் அதை தள்ளிப்போடலாம். கொஞ்சம் தள்ளிப்போய்.. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கம் வாங்க நினைக்கலாம்.

அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.

பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தீபாவளி நெருங்கி வரும் நிலையில்.. இப்போது இன்னும் உயரும். இதனால் தீபாவளிக்கு பின்பாக அமெரிக்க தேர்தல் முடிந்ததும் மக்கள் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

சபாஷ்.. கை கோர்க்கும் தமிழர்கள்-கன்னடர்கள்! பெங்களூரில் முதல்முறையாக நடக்கிறது ஒற்றுமை மாநாடு!


இதற்கு முக்கியமான சில காரணங்களை அவர்கள் அடிக்கி உள்ளனர். தீபாவளிக்கு முன் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று கூறப்படுவதால் இப்போதே தங்கத்தில் முதலீடு செய்வது கடினம். அதனால் அமெரிக்காவில் தேர்தல் முடிந்த பின் தங்கம் வாங்குவது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தீபாவளி சமயத்தில் மக்கள் பலரும் அதிகமாக தங்கம் வாங்குவார்கள். இதனால் அப்போது தங்கத்தின் விலை இன்னும் உயரும். அதற்கு பின் தங்கம் வாங்கிக்கொள்வது சரியாக இருக்கும். தற்போது டாலரின் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரும். தேர்தலுக்கு பின் டாலர் விலை கொஞ்சம் சீரடைய வாய்ப்பு உள்ளதால் அப்போது தங்கத்தின் விலை குறையும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் அமெரிக்க தேர்தலுக்கு முன்பு வரை தங்கத்தின் விலை உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+