Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹப்பாடா.. திமுகவிற்கு பறந்த குட்நியூஸ்.. மொத்தமாக புல் ஸ்டாப் வைத்த திருமா! விக்கித்து போன எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவதற்கு பதிலாக விசிக தலைவர் எம்பி திருமாவளவன் அவரை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சு காரணமாக திமுக தரப்பு குஷியாகி உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற உடனேயே நேற்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதற்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பாஜக காரணம்

பாஜக காரணம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவதற்கு பதிலாக விசிக தலைவர் எம்பி திருமாவளவன் அவரை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார், பாஜகவின் பின்னணி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்வு செய்திருக்கிறது.

பின்னணி

பின்னணி

இந்த தேர்விற்கு பாஜகதான் காரணம். பாஜகவின் ஒவ்வொரு அணுகுமுறையில் இது வெளிப்படையாக தெரிகிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், பாஜக சங்பரிவார்களின் ஆதரவுப் பின்னணியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சட்ட ரீதியாக எடப்பாடி வென்றார் என்பதை தாண்டி அவர் நீதிமன்றம் வாயிலாக வென்றார் என்பதை தாண்டி பாஜகவின் சப்போர்ட் காரணமாகவே வென்றார் என்பதே முக்கியம் என்று கூறி உள்ளார். அதாவது திருமா முதல்முறையாக எடப்பாடியை பாஜக மூலமாக வென்றார் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.

திருமா

திருமா

திருமாவின் இந்த கருத்து அதிமுகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிமுகவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக்கொண்டு இருந்தவர் தற்போது அதிமுகவை சீண்டும் வகையில் எடப்பாடியை இப்படி விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கூட்டணி குறித்த பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார் திருமாவளவன். சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார். அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.

விசிக திமுக

விசிக திமுக

அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்த இருக்கு. இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டு பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். அதாவது திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அவரின் பேச்சு இருந்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். முத்தாய்ப்பாக பாஜக அதிமுக கூட்டணி குறித்து திருமா வெளிப்படையாக பேச தொடங்கினார்.அதில், திமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது. அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட பாஜகவிற்கு தைரியம் இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார் அதிமுக மாஜி செல்லூர் ராஜு.

கூட்டணி

கூட்டணி

இதனால் இங்கே அதிமுக - விசிக கூட்டணி உருவாகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கும் பதில் அளித்த திருமா அதிமுக - விசிக கூட்டணி உருவாக வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறினார். இப்படிப்பட்ட நிலையில்தான் திருமாவின் கூட்டணி கிடைக்கும், தலித் சமூக வாக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையாக இருந்த எடப்பாடிக்கு தற்போது ஷாக் கொடுக்கும் விதமாக திருமா பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு காரணமாக திமுக இன்னொரு பக்கம் கண்டிப்பாக ஹாப்பியாக இருக்கும்.

திமுக

திமுக

திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக விசிக சப்போர்ட் தேவை. தலித் சமூக வாக்குகளை பெற விசிக சப்போர்ட் தேவை. அப்படி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடியுடன் நெருங்குவது போல பேசி திருமா பரபரப்பை கிளப்பினார். இதனால திமுகவும் கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமா எடப்பாடியை தாக்கி பேசி திமுகவிற்கு நிம்மதியை கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+