அதிமுக காலத்தில்! கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையம்! உதய சூரியன் போல உருவாக்கப்பட்டது ஏன்? காரணம்
சென்னை: அதிமுக காலத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உதய சூரியன் வடிவத்தில் இருப்பது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜனவரி 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளத்தில் மூழ்கியது.

இதன் காரணமாக அங்கே தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. தண்ணீர் வெளியேற்றுவதற்கான வெள்ள நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன. இந்த பணிகள் முடிந்த பின் அங்கே மீண்டும் புதிய சாலைகள் போடப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: அங்கே சாலைகள் போடப்பட்டு விட்டன, ஏற்கனவே பேருந்துகள் இயங்கி சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன. மீண்டும் ஒருமுறை சோதனைகள் செய்யப்பட்ட பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும் முடிவை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. புனே நிறுவனம் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஏன் சூரியன் வடிவம்: அதிமுக காலத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உதய சூரியன் வடிவத்தில் இருப்பது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி முதலில் பேருந்தின் நுழைவு வாயில்.. அதன் பின்னர் அரை வட்ட வடிவில் வரிசையாக.. அலைகள் போல அரை வட்டமாக பேருந்து நிறுத்தங்களை அமைக்கலாம் என்று திட்டம் போட்டனர். அதாவது இப்போது இருக்கும் சூரிய கதிர்கள் போல இல்லாமல் அரை வட்டமாக அடுக்கடுக்காக அமைக்கலாம் என்று திட்டமிட்டனர்.
ஆனால் அப்படி செய்யப்பட்டால் அதிக அளவில் பேருந்துகளை நிறுத்த முடியாது என்று அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். அதன்பின் நேர் கோடாக வைக்கலாம். மதுரை பேருந்து நிலையம் போல நேர் கோடாக வைக்கலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர். ஆனால் அந்த டிசைன் இட வசதியை கொடுக்காது. மக்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்ல முடியாது. கோயம்பேடு பேருந்து நிலையம் தோல்வி அடைந்ததற்கு அந்த டிசைனும் காரணம்.
இதையடுத்தே கடைசியில் உதய சூரியன் போல கதிர்கள் வருவது போல கட்டலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதையடுத்தே அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அந்த டிசைன் உறுதி செய்யப்பட்டு கட்டுமானம் தொடங்கியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications