துடித்த அதிமுக.. 2024ல் ஆட்சியை கவிழ்க்க பிளான்.. இதனால்தான் எடப்பாடி சப்போர்ட்டா? பற்ற வைத்த புள்ளி
சென்னை: 2021ல் அதிமுக வென்று இருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக எதிர்த்து இருக்கும். 2024ல் திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக இந்த திட்டத்தை ஆதரிக்கிறார்கள், அதெல்லாம் ஒரு கட்சியா என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரு நாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வருவதற்காக பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மட்டுமே இந்த ஒரு நாடு ஒரு தேர்தலை தீவிரமாக ஆதரிக்கிறது. அதிமுக இந்த முறையை ஆதரித்து உள்ளது. 2021 வரை இந்த திட்டத்தை அதிமுக எதிர்த்து வந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த திட்டத்தை எதிர்த்த எடப்பாடி இப்போது இதை ஆதரித்து உள்ளார்.
2024ல் ஒருநாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் இருக்கும் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரியான தேர்தல் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படும் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
வெள்ளைக்காரன் வந்த பின்தான் இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தது. அதற்கு முன்பெல்லாம் 56 தேசங்களாக இந்தியா இருந்தது. இங்கேயே சேரர், சோழர், பாண்டியர் என்று பிரிந்து கிடந்தோம். வாத்தியாவிலும் பல பேரரசுகள் பிரிந்து கிடந்தன. இப்போது அது போல இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. மண்டை காய்ந்து போன யாராவது கேட்பார்கள். அவர்களை நீங்கள் டீல் செய்து கொள்ளுங்கள். ஆனால் இதற்காக இந்தியா பல ஆயிரம் வருடங்களாக ஒரே நாடாக இருந்தது எல்லாம் கற்பனை.

அரசியலமைப்பு
அப்படி இருக்க 76 ஆண்டுகளாக இருக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். இதன் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க வேண்டும். மாநில அரசுகளை மதிக்க வேண்டும். அதனால்தான் இதை கூட்டாட்சி என்று சொல்கிறோம். இவர்கள் ஒரே தேர்தல் ஒரே நாடு என்று கொண்டு வருவது அதில் நெருப்பை அள்ளி போடும். கூட்டாட்சி தத்துவத்திற்கு கொல்லி வைக்கும். இந்தியாவின் ஒற்றுமையை குழைத்து, அதன் பன்முகத்தன்மையை அழிக்கும். இது ஒற்றைத்தன்மையை கொண்டு வந்தாலும், இந்த நாட்டின் சீர்கேட்டிற்கு வழி வகுக்கும்.

அடிப்படை புரிதல்
அதிமுக இதை அடிப்படை புரிதல் இல்லாமல் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதிமுக அடிப்படை கொள்கை, கோட்பாடு இல்லாமல் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளது. எம்ஜிஆர் பிறந்தநாளில் அந்த கட்சி செயல்படும் விதத்தை எண்ணி வருந்துகிறேன். கட்சிக்காக, மக்களுக்காக யோசிக்காமல், அவர்கள் சுயநலமாக யோசிக்கிறார்கள். 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து ஆட்சி செய்தவர்கள்.. இப்போது ஆட்சி கையைவிட்டு போய்விட்டது.. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வெறுப்பில், வேதனையில்.. நாட்டின் நலனை பற்றி யோசிக்காமல், சுயநலமாக இவர்கள் இதை ஆதரித்து உள்ளனர்.

ஏன் ஆதரிக்கிறார்கள்
அதிமுகவில் இதை ஆதரிக்கும் யாரிடமாவது இதை ஏன் ஆதரிக்கிறார்கள் என்று கேட்டு சொல்லுங்கள். அவர்கள் இந்த திட்டத்தை ஆதரிக்க ஒரு காரணம் சொல்லட்டும். ஒரே நாடு ஒரு தேர்தலை இவர்கள் கேட்க ஒரே காரணம்தான். 2024ல் திமுக ஆட்சி கவிழ வேண்டும். அப்போது உடனே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2011-2021 வரை அடித்த கொள்ளையை தொடர வேண்டும் என்று சொல்கிறார். 2021ல் அதிமுக வென்று இருந்தால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக எதிர்த்து இருக்கும். திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதை தவிர வேறு விஷயத்தை இவர்கள் யோசிக்கவில்லை.

அதிக நாட்கள் ஆண்ட கட்சி
முழுக்க முழுக்க சுயநலத்தோடு இந்த முடிவை அதிமுக எடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டை அதிக நாட்கள் ஆண்ட கட்சி அதிமுக. தங்கள் சுயநல எண்ணத்திற்காக, 2024ல் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வர துடிக்கிறார்கள். 2019 அவர்கள் தானே இந்த திட்டத்தை எதிர்த்தது? அதெல்லாம் ஒரு கட்சியாங்க? வாயில் வருதுங்க.. மன்னிக்கணும். 2019ல் உதிர்த்துவிட்டு என்ன சொன்னார்கள்.. நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று சொன்னார்கள். அப்போது ஆட்சியில் இருந்ததால் அப்படி சொன்னார்கள்.

எதிர்ப்பு ஏன்?
இப்போது ஆட்சியில் இல்லை என்றதும் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆட்சியில் இருக்கணும்.. கொள்ளையடிக்கணும் என்பதுதான் அவர்களின் வேலை. இதை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். அவர்கள் ஆனால் வலுவோடு இருக்க வேண்டும். ஆயிரம் சொன்னாலும் அவர்கள் மதசார்பற்ற கட்சி. அவர்கள் அரசியல் ஆரோக்கியத்தோடு வலுவோடு இருப்பதை நான் மனசார ஆதரிக்கிறேன். ஆனால் ஒருநாடு, ஒரு தேர்தல் திட்டத்தில் அவர்களுக்கு எந்த புரிதலும் இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications