கையை தூக்கியபடி.. வேகமாக ஓடி வந்த "பாட்டி".. பார்த்ததும் அதிர்ச்சி ஆன அன்புமணி.. பதறிய உதவியாளர்!
சென்னை: பாமக தலைவர் அன்புமணி சார்பாக இன்று நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டம் ஒன்றில் பாட்டி ஒருவர் நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த விமான நிலையத்திற்கு எதிராக சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த கிராம மக்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பாக கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

அன்புமணி
கிராம மக்களிடம் கருத்து கேட்கும் இந்த கூட்டத்தில் கிராமத்தினர் ஒவ்வொருவராக வந்து மேடையில் பேசிக்கொண்டு இருந்தனர். அன்புமணி இதை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். தங்களின் குறைகளை அவர்கள் மேடையில் தெரிவித்தனர்.இந்த திட்டம் வந்தால் தங்களின் விவசாய நிலம் பாதிக்கப்படும். மாற்று நிலம் விளைச்சலை கொடுக்குமா என்று தெரியாது. அரசு வேறு இடத்தில் திட்டத்தை நடத்த வேண்டும். நாங்கள் 3 போகம் விளைவிக்கிறோம். எங்கள் நிலத்தை எடுக்க கூடாது.

நிலம்
நிலத்தை எடுத்து சென்றால் எங்களின் வாழ்வாதாரம் போய்விடும். நாங்கள் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று பேசினர். இந்த நிகழ்வில் வரிசையாக பெண்கள் பலருக்கு மேடையில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விவசாய பணிகள் செய்யும் பெண்கள் பலர், நிலம் வைத்திருக்கும் பெண்கள் பலர் வரிசையாக மேடையில் பேசினார்கள். அப்போது வயதான பாட்டி ஒருவர் கையை தூக்கியபடி அன்புமணியை நோக்கி ஓடி வந்தார்.

கண்ணீர்
கண்ணீர்விட்டுக்கொண்டே.. கையை அணைப்பது போல வைத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்தார். மேடையில் அந்த பாட்டி இப்படி ஓடி வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வேகமாக ஓடி வந்ததை பார்த்து அங்கு இருந்தவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் இந்த பாட்டி இப்படி வருகிறார் என்று பலரும் அச்சத்துடன் பார்த்தனர். அதோடு அன்புமணி பக்கம் வந்தவர் .. அன்புமணி அருகே விழுந்து அவரின் காலில் கிடந்தார்.

அதிர்ச்சி சம்பவங்கள்
இதை பார்த்து அன்புமணி அதிர்ச்சி அடைந்தார். அன்புமணி கையை பிடித்து இழுத்தபடி அவர் காலில் கிடந்தார். இதை பார்த்து அன்புமணியின் உதவியாளர் வேகமாக வந்து அந்த பாட்டியை தூக்கினார். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாட்டியை தூக்கி செல்லும்படி அன்புமணி கண்ணை காட்டினார். இதையடுத்து அவரை தூக்கிக்கொண்டு அங்கிருந்து உதவியாளர் சென்றார். பின்னர் அவரிடம் ஏன் இப்படி வந்தீர்கள்.. என்னாச்சு என்று நிர்வாகிகள் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications