Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஃபுல் பவர்" தந்த ஸ்டாலின்.. பாஜகவை உறுத்தும் "மிஸ்டர் கிளீன்".. 10 எம்எல்ஏக்கள்?.. எடப்பாடி அலர்ட்

திமுகவுக்கு எதிராக களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி டீம் & மேலிட பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியை, பாஜகவும், அதிமுகவும் ஒருசேர கையில் எடுத்துள்ளதாம்.. அதற்கான வேலைகள் மும்முரமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவுக்கு நாளுக்கு நாள் சிக்கல் அதிகமாகி வருகிறது.. ஒருபக்கம் உட்கட்சி பிரச்சனைகள், மற்றொரு பக்கம், ஏகப்பட்ட ஊழல் கேஸ்கள், விசாரணை, ரெய்டுகள் என அதிகரித்துவிட்டன.

இதனால், பலம் பொருந்திய திமுகவை சமாளிக்க முடியாத அளவுக்கு பலவீனமாகி வருகிறது.. அதிமுகவே பலவீனமாகிவருவது, பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 சிக்கல் A

சிக்கல் A

காரணம், தமிழகத்தில் எப்போதுமே, திமுகவைவிட அதிமுகவுக்குதான் ஓட்டு வங்கி அதிகம் உள்ளது.. இது அந்த காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு உள்ள மிகப்பெரிய பலமாகும்.. இந்த ஓட்டுக்களை சிந்தாமல், சிதறாமல் அள்ளவே பாஜக கணக்கு போட்டு வருகிறது.. அதனால்தான், அதிமுகவில் உள்ள பிளவை, பாஜக மேலிடம் ரசிக்கவில்லை, இருவரையும் ஒன்றாக இணைந்து செயல்படும்படி மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டு வருகிறது.. அதேசமயம், திமுக கொடுக்கும் அழுத்தத்தை அதிமுக சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது என்பதையும் மேலிடம் நன்கே அறிந்து வைத்துள்ளது.

 சிக்கல் B

சிக்கல் B

அதனால்தான், திமுகவை டேமேஜ் செய்யும் விதமாக, பாஜக ஒருபக்கம், அதிமுக ஒரு பக்கம் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியதாக இருக்கிறது.. இந்த போராட்டங்கள் மக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளதாகவும் தெரிகிறது.. அதிலும் எடப்பாடி தலைமையில் போராட்டம் ஏதாவது நடத்தப்பட்டால், அதற்கு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பும் இருப்பதாகவே சொல்கிறார்கள்.. ஆனால், உடனடியாகவே, அதிமுகவை டேமேஜ் செய்யும் அளவுக்கு திமுக அரசு ஏதாவது ஒரு காய்நகர்த்தலை கொண்டு வந்து விடுகிறதாம்.. இதற்கெல்லாம் ஒரு முக்கிய ஆபீசர்தான் காரணம் என்கிறார்கள்.

 சிக்கல் C

சிக்கல் C

"நிலா" பெயரை தன்னகத்தே கொண்ட இந்த அதிகாரி, மிகவும் நேர்மையானவர்.. மிகவும் கண்டிப்பானவர்.. மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படுபவர்.. இவர் எங்கிருக்கிறாரோ, அந்த துறையில் குற்றங்கள் மலிந்துவிடும்.. முதல்வர் தரப்பினால், புல் பவர் தந்து பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்.. இந்த அதிகாரி & டீம் பதவிக்கு வந்தபிறகு, அதிமுக தரப்பு ஆட்டம் காண துவங்கிவிட்டது என்றே சொல்லலாம்.. திராவிட மாடல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை பலமாகவும் மாற்றி வருபவர் இவர்தானாம்.. அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்து வருவதும் இந்த டீம்தானாம்.. அதிமுக + பாஜக இரண்டையும் டேமேஜ் செய்து, திமுகவின் இமேஜ்ஜை காப்பாற்ற பெரும் துணையாகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.. இதனால், கையை பிசைந்து அதிமுக விழித்துள்ளது..

"நிலா"

அதுமட்டுமல்ல, இந்த அதிகாரி & டீம்களின் அதிரடிகள், திமுகவில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது.. 10 வருடம் ஆட்சி இல்லாத நிலையில், இப்போதுதான் ஆட்சிக்கு வந்து ஏதாவது லாபம் பார்க்கலாம் என்றாலும், இந்த கண்டிப்பு அதிகாரி & டீம் குறுக்கே நிற்கிறார்களாம்.. ஏதாவது ஒரு சிறிய தவறு நடந்தாலும், உடனடியாக மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிவிடுகிறார்களாம்.. தங்களின் லாப நோக்கத்துக்கு தடையாக இருக்கும், அந்த அதிகாரி & டீம்களுக்கு எதிராக அந்த எம்எல்ஏக்கள் கையை பிசைந்து நிற்கிறார்களாம்...

 பிளாக் ஷீப்

பிளாக் ஷீப்

அந்த கடுப்பிலேயே ஒருசில முக்கியமான டாக்குமெண்ட்களை அதிமுக பக்கம் அவ்வப்போது லீக் செய்து வருகிறார்களாம்.. இப்படி மறைமுகமாக தங்களுக்கு உதவுவதை மனதில் வைத்து கொண்டுதான், அன்று எடப்பாடி பழனிசாமி, "10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்' என்று சொன்னாராம்.. மாஜிக்களிடம் ரெய்டு உள்ளிட்ட விஷயங்கள் முன்கூட்டியே கசிந்ததும் இதுபோன்ற கருப்பு ஆடுகளால்தான் என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயம் மேலிடத்துக்கு பறந்துள்ள நிலையில், இது சம்பந்தமான தகவல்களும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆக மொத்தம், திமுகவின் நேர்மையான அதிகாரி & டீம்களால், அதிமுக + பாஜக ஆட்டம் கண்டுவருகிறதாம்..!!

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அந்தவகையில்தான், 2 நாட்களுக்கு முன்பேயே ரெய்டு வரும் தகவல் விஜயபாஸ்கருக்கும் போய்விட்டதாகவும், இதனால் உஷாரான அவர், தன்னிடம் கொஞ்சநஞ்சமிருந்த டாக்குமெண்ட்களையும் ரகசிய இடத்துக்கு மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயமும் திமுக தலைமைக்கு சென்று, கடும் கோபத்தை உண்டுபண்ணியிருக்கிறதாம்.. யார் அந்த கருப்பு ஆடு என்றும் மறைமுக உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.. இந்த ரெய்டு நடந்த 2 நாளிலேயே அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆளும் கட்சியை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக விஜயபாஸ்கர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+