"பிரேக்".. திடீரென அமெரிக்காவிற்கு பறக்கும் அண்ணாமலை.. அதுவும் 2 வாரம்.. ஆஹா! காரணமே வேறயாம்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2 வார பயணமாக அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியலில் பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் பிசியாக இருக்கிறார். ஆளும் திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள், போராட்டங்கள், பேரணிகள் என்று இவர் பிசியாக இருந்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக சார்பாக போராட்டங்கள் செய்யப்பட்டன.

அமெரிக்கா
இந்த நிலையில்தான் திடீரென அண்ணாமலை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை அவர் சென்னையில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார். சமீபத்தில்தான் இலங்கைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் உழைப்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை கடந்த ஏப்ரல் 30ம் தேதி இலங்கை சென்றார். இலங்கையில் மலையக தமிழர்கள், மீனவர்கள் உடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார். அங்கு இருக்கும் சீதா கோவில் உட்பட இந்து கோவில்கள் பலவற்றில் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார்.

என்ன சொன்னார்?
அதன்பின் கச்சத்தீவை மீட்பது பற்றியும் அண்ணாமலை பேசி இருந்தார். திமுக அரசை இதில் கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இலங்கை அரசு இலவச விசா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சென்னை திரும்பிய அண்ணாமலை தெரிவித்தார். ஆனால் கச்ச தீவிற்கு செல்ல தமிழர்களுக்கு விழாவின் போது விசா கேட்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அண்ணாமலை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அமெரிக்கா
தனது உயர் கல்விக்காக அண்ணாமலை டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தமிழர்கள் பலர் வசித்து வருகின்றனர். இதில் சமீபமாக மோடி ஆதரவாளர்கள் அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில் இரண்டு வார பயணமாக அண்ணாமலை அமெரிக்கா செல்கிறார். அங்கு தமிழர்களை அவர் சந்திப்பார். அதேபோல் அவர்களின் பிரச்சனைகள், இந்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள், விசா விவகாரம் என்று பல விஷயங்களை அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.

தூதரக உதவி
அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு செய்ய வேண்டிய தூதரக ரீதியான உதவிகள் தொடர்பாக அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 12ஆம் தேதி அண்ணாமலை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவார். அரசியலில் பிஸியாக இருந்த அவர் சிறிய பிரேக் போல அமெரிக்கா செல்வதாக கூறப்படுகிறது. இவருடன் பாஜக நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. இது கட்சி ரீதியான பயணம் கிடையாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அண்ணாமலையை அமெரிக்காவில் வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications