"புரியலயா.. கமல் என்றாலே "தாமரை" என்று அர்த்தம்.. பரபரப்பை கிளப்பிய வானதி சீனிவாசன்..!!
கமல் பெயரை தினமும் 100 முறை உச்சரிக்கிறேன் என்கிறார் வானதி சீனிவாசன்
சென்னை: கமல் பெயரை ஒருநாளைக்கு 100 முறையாவது உச்சரித்து கொண்டே இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்றே சொல்ல வேண்டும்.. அன்றைய காலங்களிலும் அப்படித்தான் இருந்தது..
ஆனால் நாளுக்கு நாள் அதிமுகவின் பலம் இங்கு குறைய ஆரம்பித்தது... பாஜக பலம் வெளியே தெரிய ஆரம்பித்தது.. இதை ஒவ்வொரு வருட தேர்தல் முடிவில் வரும் வாக்கு சதவீதங்களிலும் தெளிவாக பார்க்க முடியும்...

விஷப்பரீட்சை
கடந்த சட்டசபை தேர்தலின்போது, இந்த தொகுதியில் வானதி களமிறங்கினார்.. அவருக்கு வாக்கு சேகரிக்க, டெல்லி மேலிட தலைவர்கள் முதல், நமீதா, ராதாரவி வரை வந்து போனார்கள்.. ஆனால், கமலுக்கு இருந்த ஒரே சிக்கல், தனக்காகவும் ஓட்டு கேட்டுக் கொண்டு, தன் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்.. மநீம கூட்டணியை பொறுத்தவரை நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை என்பதால் கமலே இந்த விஷப்பரீட்சையில் இறங்கினார்.

தொகுதி
எனினும், கோவை தெற்கு தொகுதி ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பில் வாக்காளர்களை வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் வைரலாகின.. தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் பல வெளிவந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசிவரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாமலேயே இருந்தது.

கமல் பெயர்
அதனால், இந்த தொகுதியின் ரிசல்ட் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது.. அதுவும் ரிசல்ட் தினத்தன்று, மக்களுக்கே பிரஷர் எகிறிவிட்டது. இந்நிலையில், தினமும் 100 தடவையாவது, கமல் பெயரை உச்சரிக்கிறேன் என்று சொல்லி பரபரப்பை மேலும் கிளப்பி உள்ளார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. உபியில் தேர்தல் நடந்து வருகிறது.. அதனால் அங்கு பிரச்சாரம் செய்ய வானதி சென்றுள்ளார்.. பாஜகவின் மகளிரணி தேசிய தலைவராக இருப்பதால், 10 நாட்களாக வானதி உபியில்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்..

வானதி சீனிவாசன் பிரச்சாரம்
லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், புத்தர் பிறந்த கபிலவஸ்து, கபீர்தாஸ் சமாதி அமைந்துள்ள சந்த் கபீர் மாவட்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசார அனுபவம் குறித்து வானதி சொல்லும்போது: தமிழக சட்டசபை தேர்தலில், கமலுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கோவையில் பிரச்சாரம் செய்தேன்... ஆனால், உத்தரபிரதேசத்தில் கமலுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறேன்.. கமல் என்றால் தாமரை என்று அர்த்தம்..
கமல் பெயர்
அதனால், தினமும் குறைந்தது 100 தடவையாவது கமல் பெயரை உச்சரித்து கொண்டிருக்கிறேன். உத்தரபிரதேசத்தில் கங்கை, ரப்தி, கோமதிஎன பல நதிகள் பாய்கின்றன... 20 அடியில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது... பாசுமதி, கோதுமை, கரும்பு, கடுகு, கசகசா என்று விவசாயமும் செழித்து காணப்படுகிறது.. எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்று பசுமைதென்படுகிறது.. ஆனாலும், மக்களிடம் வறுமை நிலவுகிறது... யோகி இங்கு முதல்வரான பிறகுதான் மாநிலமே மேம்பட்டு வருகிறது.
மீண்டும் பாஜக ஆட்சிதான்
தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் இப்படி எத்தனையோ உள்கட்டமைப்பு வசதிகள் இந்த 5 கால பாஜக ஆட்சியில் வந்துள்ளன... இலவச காஸ் இணைப்பு, கழிப்பறைகள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதனால், உபியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக தென்படுகிறது" என்றார் வானதி சீனிவாசன்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே!












Click it and Unblock the Notifications