இரும்புக்கூட்டின் கதவு! குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 -ஸ்டாலின் சொன்ன யுனிவர்சல் இன்கம் என்றால் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக முதலவர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். அவர் தனது பேச்சில் யுனிவர்சல் இன்கம் குறித்தும் குறிப்பிட்டார்.

மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பூட்டிபூட்டிய இரும்புக்கூட்டின் கதவுய இரும்புக்கூட்டின் கதவு

பூட்டிபூட்டிய இரும்புக்கூட்டின் கதவுய இரும்புக்கூட்டின் கதவு

இந்த நிலையில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக முதலவர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், இந்தியாவில் ஒடுக்கப்பட்டு இருந்த பெண்கள் இப்போதுதான் வெளியே வர தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அடைக்கப்பட்டு இருந்த பெண்கள் வெளியே வர திராவிட கொள்கைதான் காரணம். பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு பெரியாரால் உடைக்கப்பட்டது. நீதிக்கட்சியில் தொடங்கி திமுகவின் திராவிட மாடல் அரசு வரை பெண்களை முன்னேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நாம் இதில் பெரிய வெற்றியும் கூட பெற்று இருக்கிறோம். அதன் ஒரு கட்டமாகவே நாம் இப்போது உரிமைத்தொகையை அளிக்கிறோம்.

யுனிவர்சல் இன்கம்

யுனிவர்சல் இன்கம்

உலகம் முழுக்க பல நாடுகளில் யுனிவர்சல் இன்கம் சோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சோதனை முயற்சியாக பணம் கொடுக்கப்படும் நாடுகளில் பணம் பெறும் மக்கள் நேரடியாக வறுமையில் இருந்து வெளியேற வருகிறார்கள். வறுமை இதனால் பெரிய அளவில் ஒழிக்கப்பட்டதாக இந்த சோதனைகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. யுனிவர்சல் இன்கம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் வறுமையில் இருக்கும் மக்களை தேர்வு செய்து, அடித்தட்டு மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாத உதவித்தொகையை கொடுப்பது.

மாபெரும் முன்னெடுப்பு

மாபெரும் முன்னெடுப்பு

சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் உலகின் பல நாடுகளில் வெற்றிபெற்றுள்ளது. அதை நாம் உதவித்தொகை என்று அழைக்காமல் பெண்களுக்கான உரிமைத்தொகை என்று அழைக்க வேண்டும். நாம் அளிக்கும் இந்த உரிமைத்தொகை நேரடியாக பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை செய்வதற்காக தற்போது கணக்கீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தெளிவு

தெளிவு

முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் இருந்து.. இந்த பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது உறுதியாகிறது. 1 கோடி பெண்கள் இதனால் பலன் அடைய போகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு நாடுகளில் யுனிவர்சல் இன்கம் மூலம் அடித்தட்டு மக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வருமானமாக அளிக்கப்படும். காங்கிரஸ் கூட கடந்த தேர்தலில் இதை வாக்குறுதியாக கொடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த திட்டத்தை பற்றி ஸ்டாலினும் பேசி உள்ளார்.

திட்டம் எப்படி?

திட்டம் எப்படி?

இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்கள் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி குடும்ப தலைவிகள் தனியாக வங்கி கணக்கை வைத்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதோடு முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பேச்சில் இருந்து.. இந்த பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது உறுதியாகிறது. பல குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்கள் இணை கணக்கு வைத்து இருப்பார்கள் அல்லது கணக்கே வைத்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் பணம் பெறுவதற்கு வங்கி கணக்கு கட்டாயம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+