ரெஸ்டே இல்லை.. என்ன ஸ்பீடு.. சட்டென டெல்டாவிற்கு பறந்த ஸ்டாலின்.. அதிரடி ஆய்வு! இன்று என்ன நடக்கும்?
சென்னை: டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு கடந்த 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்பினார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முக்கியமான ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தினார்.

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நிறுவனங்களை சந்தித்து இதற்காக ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்தினார்.
ஓய்வே இல்லை: ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தில் 13 முக்கியமான ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு பின் ஓய்வே எடுக்காத முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
நேற்று கூட ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரகடத்தில் நிறுவியுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
அதேபோல் சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் மொத்தம் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் உலக தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறக்கப்படவுள்ள நிலையில் அதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
டெல்டா பயணம்: இந்த நிலையில்தான் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் அவர் டெல்டாவில் நீர் நிலைகளை ஆய்வு செய்ய உள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிரபித்துள்ளார். டெல்டாவில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்யவுள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டெல்டாவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்விற்கு பின் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்வார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications