லட்டு போல "தூக்க" காத்திருக்கும் பாஜக..இப்பவே கண்ணை கட்டுதே.. ராகுலை காணோமாமே.. புலம்பும் கதர் கட்சி
5 மாநில பிரச்சாரங்களில் ராகுல்காந்தி தென்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: 5 மாநில தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், ராகுல்காந்தியின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதாக ஒரு பேச்சு தேசிய அரசியலில் எழுந்துள்ளது.. 5 மாநில பிரச்சாரங்களிலும் ராகுலை பார்க்க முடிவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.. ராகுலுக்கு என்னதான் ஆச்சு?
இன்னும் சில மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க போகிறது.. எனவே மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக வியூகம் அமைத்து வருகிறது..
நடக்க போகும் 5 மாநில தேர்தலில், 4 மாநிலத்தில் ஏற்கனவே பாஜகதான் ஆண்டு வருகிறது.. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.. அதனால், இத்தனை காலமும் விட்டதையெல்லாம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் இறங்கி வருகிறது.

பிரியங்கா காந்தி
அதிலும், இந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக கருதப்படும்,தங்களின் கோட்டையாக ஒருகாலத்தில் கருதப்பட்ட உபியை, இந்த முறை வென்றெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.. இதற்காகவே பிரியங்காவுக்கு அம்மாநில காங்கிரஸின் புதிய பொறுப்பையும் தந்து, அனுப்பியும் வைத்தது.. பிரியங்காவும் கடந்த ஒரு வருடமாகவே உபியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் புதுபுது அறிவிப்புகளை வெளியிட்டு, இந்த தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவத்தை அளித்தும் வருகிறார்.

ராகுல் காந்தி
இதற்கு நடுவில் அவ்வப்போது, பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவை ஒவ்வொரு செயலிலும் எதிர்த்து கொண்டிருக்கிறார்.. நெத்தியடி பதிலை தந்து, நேரடியாகவே உபி முதல்வர் யோகிக்கு சவால் விடுத்து கொண்டிருக்கிறார்.. இவ்வளவும் பிரியங்கா செய்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி எங்கே போனார்? 5 மாநில தேர்தல்கள் நடக்கிற நேரத்தில், ராகுலின் பிரச்சாரங்கள் குறைந்து காணப்பட காரணம் என்ன? ஏன் தீவிர பிரச்சாரத்தில் ராகுல் இறங்கவில்லை என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

தலைவர் பதவி
நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 வருடமாக தலைவர் யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமானதும்கூட.. சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், ராகுலும் பொறுப்பேற்காத நிலையில், இது சம்பந்தமாக கடிதம் எழுதி அதிருப்திக்கு உள்ளானவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில், வேறு தலைவர்களும் நியமனம் செய்ய முடியாத நிலையில், காங்கிரஸ் தள்ளாடிகொண்டிருக்கிறது.

பிரச்சாரங்கள்
இந்த பலவீனங்களை சரிக்கட்ட ராகுலும் களம் இறங்கினால் மட்டுமே ஓரளவு வாக்குகளை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.. ஆனாலும் தன் பொறுப்பை உணராமல், ராகுல் காந்தி திடீரென கிறிஸ்துமஸ் விடுமுறையில் இத்தாலி புறப்பட்டு சென்றார்.. அப்போதே பாஜக, மற்றும் திரிணாமுல் கட்சியும் இதை ஒரு பிரச்சனையாக கிளப்பின.. அதற்கு பிறகு அவர் நாடு திரும்பியபோதும், 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும்கூட, பெரிதாக பிரச்சாரங்களில் பங்கேற்காதது, தொண்டர்களிடையே அதிருப்தியை பெருக்கி வருகிறது... குறைந்தபட்சம் உபி மாநிலத்தில்கூட ராகுலின் செயல்பாடுகள் குறைவாக உள்ளது, அதிர்ச்சியையே தந்துவருகிறது.

எம்பி தொகுதி
இதற்கு ஒரு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.. அமேதி எம்பி தொகுதியில் 2019ம் வருடத்தில் கிடைத்த அதிர்ச்சி தோல்வியே ராகுலின் ஆர்வமின்மைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. வயநாடு எம்பி தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றதால், அங்கே சில சமயம் செல்வதையும் காண முடிகிறது.. எனினும், உபி மிக முக்கிய தொகுதி என்பதால், குறைந்தபட்சம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவாவது ராகுல் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. தவிர, பிரியங்கா என்ற ஒற்றை நபரால் மட்டுமே, உபி பாஜகவை சமாளிக்க முடியாத சூழல் உள்ளது..

அகிலேஷ் யாதவ்
ராகுலின் இந்த பின்னடைவு ஒருபக்கம் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், இதை சமாஜ்வாதி கட்சி முழுமையாக பயன்படுத்தி கொள்ளும் என்றே தெரிகிறது.. சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் இவர்கள் எல்லாம் ஒன்றுகூடும்போது, காங்கிரஸ் மேலும் அங்கு பலவீனமடையவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.. பாஜகவுக்கு ட்விட்டர் மூலமே ராகுல் காந்தி பதிலடி தந்து கொண்டிருப்பது எந்த வகையிலும் சரியில்லை என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.. இந்த கருத்தை யார் வேண்டுமானாலும் ட்விட்டரில் பதிவு செய்யலாம், ஆனால் ராகுல்காந்தி, களத்தில் குதிக்க வேண்டிய தருணம் இது என்றும் எச்சரிக்கிறார்கள்..

பாஜக வெற்றி
ராகுல் முழுவீச்சில் இறங்கினால்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மணிப்பூர், போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி கோதாவில் குதிக்கும்.. இல்லாவிட்டால் வழக்கம்போல் தேங்கி கிடக்கும் நிலைதான் இந்த முறை தேர்தலிலும் எதிரொலிக்கும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ராகுல்காந்தியின் பிரச்சார தீவிர தன்மை இல்லாமல் இருப்பதுதான், பாஜகவின் வெற்றிக்கு ஆகச்சிறந்த பலமாக இருக்க போகிறது என்று அரசியல் நோக்கர்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..!
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications