அல்வா மாதிரி சான்ஸ்.. ஆனா.. ஆறுமுகசாமி ரிப்போர்ட் பற்றி வாயே திறக்காத எடப்பாடி! காரணமே "அவர்தானாமே"
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது சசிகலா. சசிகலா சொல்படிதான் அதிமுகவில் எல்லாமே நடந்து கொண்டு இருந்தது.
இன்னொரு பக்கம் ஆட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது ஓ பன்னீர்செல்வம். அவர்தான் துணை முதல்வராக இருந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
ஆட்சி ரீதியாக பணிகள் அனைத்தையும் ஓ பன்னீர்செல்வம்தான் செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை குற்றவாளியாக கருத வேண்டும் என்று நேரடியாக ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்டில் கூறி உள்ளது. அதோடு இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சசிகலா
முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது. அதில், இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர். ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கை எடப்பாடி
இந்த அறிக்கை கிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அல்வா மாதிரி வந்து இருக்கும் வாய்ப்பு ஆகும். அல்வா மாதிரி வந்த இந்த சான்சை பயன்படுத்தி எடப்பாடி அதிமுகவினரை தன் பக்கம் இழுக்க முடியும். அதாவது சசிகலாதான் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூற முடியும். அதோடு அப்போது ஓ பன்னீர்செல்வம்தான் துணை முதல்வராக இருந்தார். அவரும் சேர்ந்து கொண்டுதான் துரோகம் செய்துவிட்டார் என்றும் எடப்பாடி குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்.

அல்வா மாதிரி சான்ஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. இப்போது இந்த சர்ச்சையை எடப்பாடி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனாலும் எடப்பாடி இதை பற்றி பேசுவதே இல்லை. ஈசியாக கிடைத்த வாய்ப்பை, அவர் ஏனோ பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் விஜயபாஸ்கர் மற்றும் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிராக அறிக்கை இருப்பதால் அதை பற்றி எடப்பாடி பேச விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி ஏன் பேசவில்லை
அதோடு கடந்த முறை எடப்பாடிக்கு ஆட்சியில் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பெயரும் அறிக்கையில் உள்ளது. எய்ம்ஸ் குழு அறிக்கையையும் இந்த ரிப்போர்ட் நிராகரித்து உள்ளது. இப்படி ஒரு அறிக்கையை ஆதரித்து பேசினால் அது தவறாகும் என்றுதான் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிக்கை பற்றி பேசவே இல்லை என்று கூறப்படுகிறது. சசிகலாவிற்கு எதிராக அறிக்கை இருந்தும் கூட அதை பற்றி பேசாமல் எடப்பாடி இருக்க இதுவே காரணம் என்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications